Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விமர்சனங்களுக்கு பதிலடி.... அந்த துறையிலும் முன்னேற்றம்... ரிஷப்புக்கு கோலி புகழாரம்

சென்னை: 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றிக்கு முக்கிய காரணமாக ரிஷப் பண்ட் இருந்ததாக விராட் கோலி புகழ்ந்துள்ளார்.

இங்கிலாந்துக்கு அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் இந்திய வீரர்கள் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் அசத்தினர். குறிப்பாக பண்ட்-ன் ஆட்டம் அனைவரையும் வாய்ப்பிளக்க செய்தது.

இந்நிலையில் இந்திய அணியின் வெற்றி குறித்து பேசிய விராட் கோலி, ரிஷப் பண்ட்-க்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

மிரட்டல்

மிரட்டல்

ஆஸ்திரேலிய தொடரில் பண்ட்-க்கு மீண்டு வாய்ப்பு வழங்கப்பட்டது முதல் இன்றுவரை அவர் அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் வியக்க வைத்து வருகிறார். இங்கிலாந்துடனான 2வது டெஸ்டிலும் ரிஷப் பண்ட் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சொதப்பல்

சொதப்பல்

பேட்டிங்கில் அதிரடி காட்டினாலும் கீப்பிங்கில் ரிஷப் பண்ட் தொடர் விமர்சனங்களுக்கு ஆளாகி வந்தார். கீப்பிங்கில் அவர் கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் வீரர்கள் அறிவுரை கூறி வந்தனர். ஆனால் 2வது டெஸ்டில் கீப்பிங்கிலும் பண்ட் அசத்தினார்.

ஸ்பைடர் மேன்

ஸ்பைடர் மேன்

முதல் இன்னிங்சில் 39வது ஓவரில் சிராஜ் பந்துவீசிய பந்து, எதிரில் இருந்த இங்கிலாந்து அணி ஓப்பனர் ஒல்லி போப் க்ளவுஸில் பட்டு எட்ஜானது. இதனை ரிஷப் பண்ட் ஒற்றை கையில் தாவி பிடித்தார். அதே போல் ஜாக் லீச்சை வெளியேற்றியது மற்றும் டேனியல் லாரன்ஸ், மொயின் அலி ஆகியோரை ஸ்டம்பிங் செய்து வியக்க வைத்தார்.

விராட் புகழாரம்

விராட் புகழாரம்

வெற்றி குறித்து பேசிய விராட் கோலி, ஒவ்வொரு போட்டியிலும் ரிஷப் பண்ட் கடின உழைப்பால் கீப்பிங்கில் முன்னேற்றம் அடைந்து வருகிறார். அவரின் மதிப்பு எங்களுக்கு தெரியும். அதனால் அவரை அணியில் வைத்து கீப்பிங்கில் முன்னேற்றம் செய்வோம். 2வது டெஸ்டில் அவரின் பங்களிப்புக்கு நன்றி என தெரிவித்தார்.

Story first published: Tuesday, February 16, 2021, 18:41 [IST]
Other articles published on Feb 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+