ஒல்லி சமி… நல்லா விளையாடும் சமி… மனம் திறந்து பாராட்டும் கோலி.. வாழ்த்தும் ரசிகர்கள்
மும்பை:சமீப காலமாகவே சிறப்பாக விளையாடி வரும் இந்திய வீரர் முகமது சமியை புகழ்ந்து தள்ளி வருகிறார் கேப்டன் விராட் கோலி.
ஆஸ்திரேலியா உடனான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இந்திய அணிக்கு புதிய உத்வேகத்தை கொடுத்திருக்கிறது. முதல் போட்டியில் இறுதிவரை விளையாடிய தோனி, ஜாதவ் கூட்டணி 149 ரன்கள் குவித்து அனைவரையும் வாய் பிளக்க செய்தது.
அந்த போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வாகை சூடியது. 5வது இடத்தில் ஜோடி சேரும் வீரர்கள் சமீப காலமாக சொதப்பி வந்த குறையை இந்தாண்டு தொடக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் சரி செய்து வருகின்றனர். தோனி ஜாதவை விட இன்னொரு வீரரும் அபாரமாக விளையாடி வருகிறார்.

விக்கெட் வீழ்த்திய சமி
அவர் தான் முகமது சமி. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் 2/42 என்ற கணக்கில் விக்கெட் வீழ்த்தினார் சமி. அதுவும் மிக முக்கியமான மேக்ஸ்வெல் விக்கெட்டை அவர் வீழ்த்திய விதம் மிக அருமை.
டுவிட்டர் வாழ்த்து
போட்டி முடிந்த பிறகு அவரை சந்தித்த கோலி அவருடன் செல்பி எடுத்துள்ளார். அதனை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஒல்லியான சமி
நான் சமியை இவ்வளவு ஒல்லியாக பார்த்ததே இல்லை. மேக்ஸ்வெலின் விக்கெட்டை அபாரமாக எடுத்தார். வெற்றியின் மேல் இவ்வளவு பசியுடன் அவரை பார்த்ததே இல்லை.

நல்ல சகுனம்
உலக கோப்பை போட்டிக்கு இது ஒரு நல்ல சகுனம் என்று கூறியுள்ளார். இது ஒரு புறம் என்றால் சிறப்பாக விளையாடிய வீரரை இப்படி மனதார பாராட்டும் கோலியின் குணத்தை அணியின் மற்ற வீரர்களும் மட்டுமல்ல... ரசிகர்களும் இன்னும் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications