சிறந்த சர்வதேச வீரர்... கோஹ்லிக்கு விருது.... பார்மி ஆர்மி வழங்கியது!
செல்ம்ப்ஸ்போர்டு: இங்கிலாந்தைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் சங்கமான பார்மி ஆர்மி சார்பில், 2017 மற்றும் 2018ம் ஆண்டுக்கான சிறந்த சர்வதேச வீரர் என்ற விருது இந்திய கேப்டன் விராட் கோஹ்லிக்கு வழங்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் விளையாடி வருகிறது. டி-20 தொடரை இந்தியாவும், ஒருதினப் போட்டித் தொடரை இங்கிலாந்தும் வென்றுள்ளன.

இந்த நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1ம் தேதி துவங்குகிறது. அதற்கு முன், எசக்ஸ் அணியுடனான பயிற்சி ஆட்டம் நேற்று துவங்கியது.
இந்தப் போட்டி துவங்குவதற்கு முன், 2017 மற்றும் 2018ம் ஆண்டுகளுக்கான சிறந்த சர்வதேச வீரர் என்ற விருது இந்திய கேப்டன் விராட் கோஹ்லிக்கு வழங்கப்பட்டது.
இங்கிலாந்தைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் அமைப்பான பார்மி ஆர்மி சார்பில் இந்த விருது வழங்கப்பட்டது. இது தொடர்பான படங்களை, பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications