Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டிராவிட் - கோலிக்கு பறந்த அவசர கடிதம்.. திடீரென ஆலோசனைக்கூட்டம்..எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் இதோ

மும்பை: இந்திய அணியின் எதிர்காலத்தை முடிவு செய்ய ராகுல் டிராவிட் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்த வாரமே புறப்படவிருந்த சூழலில் ஒருவாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பால், இந்திய அணியின் சுற்றுப்பயணத்தில் பல மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.

 தென்னாப்பிரிக்கா டூர்

தென்னாப்பிரிக்கா டூர்

இரு அணிகளுக்கு இடையேயும் முதலில் 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரும், 4 டி20 போட்டிகளும் நடத்தப்படவிருந்தது. ஆனால் அந்த நாட்டில் ஓமிக்ரானின் தாக்கம் அதிகமாக இருப்பதால் டி20 போட்டிகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் வரும் டிசம்பர் 16ம் தேதி தொடங்கவிருந்த போட்டிகள் டிசம்பர் 26ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இதனால் இந்திய அணிகான வீரர்களை தேர்வு செய்வதிலும் தாமதமானது.

அவசர ஆலோசனை குழு

அவசர ஆலோசனை குழு

இந்நிலையில் இன்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் கோலிக்கு பிசிசிஐ அவசர அழைப்பு விடுத்துள்ளது. இன்று மதியம் 2 மணியளவில் தேர்வுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் முதன்மை விஷயங்களாக துணைக்கேப்டன் அஜிங்கியா ரகானேவை அணியில் தக்கவைக்கலாமா?, இஷாந்த் சர்மாவின் டெஸ்ட் எதிர்காலம் என்ன ஆகியவை குறித்து முடிவு எட்டப்படவுள்ளது.

அணியின் விவரம்

அணியின் விவரம்

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கு மொத்தமாக 25 வீரர்கள் கொண்ட அணியை தேர்வு செய்யவுள்ளனர். ஏற்கனவே தென்னாப்பிரிக்காவில் இந்திய ஏ அணி சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் இருக்கும் சிறந்த வீரர்களும் அழைத்துக்கொள்ளப்படவுள்ளார்கள். இவர்களின் விவரங்கள் அனைத்தும் இன்று மாலை அறிவிக்கப்படும். வரும் டிசம்பர் 16ம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு புறப்படுவார்கள் எனத்தெரிகிறது.

Recommended Video

Dravid-Kohliக்கு பறந்த அவசர கடிதம்! Selectorsன் Announcement என்ன? | OneIndia Tamil
டிராவிட்டின் கோரிக்கை

டிராவிட்டின் கோரிக்கை

இந்திய வீரர்களுக்கு சற்று ஓய்வு தேவை என ராகுல் டிராவிட் கேட்டுக்கொண்டிருந்தார். அதன்படி தான் ஒருவார காலம் புறப்பாடு ஒத்திவைக்கப்பட்டது. ஓய்வில் இருந்த ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தற்போது பயோ பபுள் வளையத்திற்குள் சென்றுவிட்டனர். இதனால் அவர்கள் நிச்சயம் அணியில் இடம்பெறுவார்கள்.

Story first published: Tuesday, December 7, 2021, 17:18 [IST]
Other articles published on Dec 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+