Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

100வது டெஸ்ட்டில் கோலி சாதனை – மைல்கல்லை எட்டிய கிங் கோலி.. 5வது இந்திய வீரர் என்ற பெருமை

மொஹாலி: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

விராட் கோலி தனது 100வது டெஸ்டில் இலங்கைக்கு எதிராக விளையாடி வருகிறார்.

விராட் கோலி பேட்டிங் செய்ய களமிறங்கிய போது ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

கோலி அசத்தல்

கோலி அசத்தல்

பேட்டிங் செய்யும் போதே ரன் அடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் களமிறங்கினார். இன்னிங்ஸ் தொடக்கத்திலேயே தனது டிரேட் மார்க் ஸ்ட்ரைட் டிரைவ் ஆடி தான் ஃபார்மில் இருப்பதை உறுதி செய்தார் விராட் கோலி. தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

900 பவுண்டரி

900 பவுண்டரி

விராட் கோலி தனது சர்வதேச கிரிக்கெட்டில் 900 பவுண்டரிகளை விளாசி அசத்தினார், ஒரு பந்தை லேக் சைடில் அடிக்க முயன்ற போது அது காலில் பட்டது. அதற்கு இலங்கை வீரர்கள் அவுட் கேட்டனர். ஆனால் பந்து லேக் ஸ்டம்பை விட்டு விலகி சென்றதால் நடுவர் அவுட் தரவில்லை.

8000 ரன்கள்

8000 ரன்கள்

இந்த இன்னிங்சின் போது விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார். இதன் மூலம் 100 டெஸ்ட்டில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி 5வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் 8553 ரன்களுடன் டிராவிட் முதலிடத்தில் உள்ளார்.

5வது இந்திய வீரர்

5வது இந்திய வீரர்

2வது இடத்தில் சேவாக் 8487 ரன்களும், 3வது இடத்தில் கவாஸ்கர் 8479 ரன்களும், 4வது இடத்தில் சச்சின் 8405 ரன்களும் அடித்துள்ளனர். சச்சினை முந்த வேண்டும் என்றால் இந்த டெஸ்டில் கோலி மேலும் 400 ரன்கள் அடிக்க வேண்டும். இதே போன்று அதிவேகமாக 8 ஆயிரம் ரன்களை அடித்த 5வது இந்திய வீரர் என்ற பெருமைய கோலி பெற்றுள்ளார். இந்த பட்டியலில் சச்சின் முதலிடத்தில் உள்ளார்.

Story first published: Friday, March 4, 2022, 16:59 [IST]
Other articles published on Mar 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+