Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலி உலக சாதனை..2வது இந்திய அணி நபர் என பெருமை..முதல் முறை கோலி கிரிக்கெட்டில் நடந்த வினோதம்

டெல்லி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் சதம் விளாசாத விராட் கோலி, தனது சொந்த மண்ணில் பெரிய சாதனையை செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

இதற்காக போட்டிக்கு முன்பு கடும் பயிற்சியில் ஈடுபட்ட விராட் கோலி , பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டார். ஆஸ்திரேலிய அணி வீரர்கள் இம்முறை 3 சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து சிறப்பாக செயல்பட்டனர்.

முதல் இன்னிங்ஸ்

முதல் இன்னிங்ஸ்

ஆடுகளத்தில் பந்தின் பவுன்ஸ் கொஞ்சம் மாறி மாறி இருந்தது. இதனால் பேட்டிங் செய்யும் போது கடும் கவனத்துடன் நின்று விராட் கோலி விளையாடினார். முதல் இன்னிங்ஸ் தனி ஆளாக நின்று விராட் கோலி இந்திய அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்த்த நிலையில் விராட் கோலி 44 ரன்கள் எடுத்த நிலையில் நடுவரின் தவறான முடிவால் ஆட்டமிழந்தார்.

முதல் முறை

முதல் முறை

இதனையடுத்து விராட் கோலிக்கு 2வது இன்னிங்சில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அப்போது விராட் கோலி தைரியமாக விளையாடி ரன்களை சேர்த்தார். 3 பவுண்டரிகளை அடித்த கோலி 20 ரன்கள் சேர்த்த போது இறங்கி வந்து அடிக்க முயன்று ஸ்டம்ப் அவுட் ஆனார். இதன் மூலம் விராட் கோலி தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக ஸ்டம்ப் அவுட் ஆனார்.

புதிய சாதனை

புதிய சாதனை

மேலும் இந்த இன்னிங்ஸ் மூலம் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 25 ஆயிரம் ரன்களை கடந்த 6வது வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும் இந்த மைல்கல்லை அதிவேகமாக எட்டிய வீரர் என்ற சாதனையை கோலி படைத்தார். மேலும், இந்திய அணியை பொறுத்தவரை சச்சினுக்கு பிறகு 25 ஆயிரம் ரன்களை எட்டிய 2வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

டிராவிட் பாராட்டு

டிராவிட் பாராட்டு

கோலியின் இன்னிங்ஸ் குறித்து பாராட்டிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட், விராட் கோலி தற்போது பந்தை நன்றாக கணித்து வருவதாகவும், களத்தில் நிற்கும் போது மனதளவில் அமைதியாக இருப்பதாகவும் பாராட்டினார். இந்த இன்னிங்ஸ் மூலம் கோலிக்கு பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என்று டிராவிட் தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, February 19, 2023, 15:02 [IST]
Other articles published on Feb 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+