நடுவராக மாறிய விராட் கோலி.. ரோகித்தின் ரிவ்யூவிற்கு தந்த சுவாரஸ்ய ரியாக்ஷன்.. தீயாய் பரவும் வீடியோ
கவுகாத்தி: இலங்கை அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவின் விக்கெட்டிற்கு விராட் கோலி கொடுத்த ரியாக்ஷன் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது.
இரு அணிகளும் மோதிய இந்த போட்டி கவுகாத்தியில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 374 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.
இந்திய அணியின் இந்த பிரமாண்ட ஸ்கோருக்கு முக்கிய காரணம் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் அரைசதங்களும், விராட் கோலியின் தரமான சதமும் தான் ஆகும்.

ரோகித்தின் இன்னிங்ஸ்
குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் தனது பழைய ஃபார்முக்கு வந்துள்ளார். 67 பந்துகளை சந்தித்த அவர், 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 83 ரன்களை விளாசினார். இதில் ரோகித்தின் விருப்பமான புல் ஷாட்டை ரசிகர்களால் பார்க்க முடிந்தது. எனினும் அவரால் சதத்தை பூர்த்தி செய்ய முடியவில்லை. டில்ஷான் மதுஷங்க வீசிய பந்தில் துரதிஷ்டவசமாக போல்ட்டாகி வெளியேறினார்.

சுவாரஸ்ய சம்பவம்
இந்நிலையில் ரோகித் சர்மா அவுட்டாகவிருந்த போது விராட் கோலி கொடுத்த ரியாக்ஷன் கவனத்தை ஈர்த்துள்ளது. ரோகித் 45 ரன்கள் அடித்திருந்த போது ஹசரங்கா வீசிய பந்தை பேட்டில் அடிக்க தவறவிட்டு, பேடில் பட்டது. அப்போது ஒட்டுமொத்த இலங்கை அணியும் அவுட் கேட்டனர். ஆனால் கள நடுவர் உறுதியாக தெரியாததால் நாட் அவுட் என முடிவு கொடுத்தார். உடனடியாக இலங்கையின் சார்பில் 3வது நடுவருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

கோலியும் ஆராய்ச்சி
ஒருபுறம் இரு அணி வீரர்களும் அம்பயரின் முடிவை எதிர்நோக்கி காத்திருக்க, டக் அவுட்டில் அமர்ந்திருந்த கோலியோ ஆராய்ச்சி செய்ய தொடங்கிவிட்டார். சரியான லைனில் வீசிய போதும், அதிக பவுன்ஸ் இருந்தது. எனவே பந்தின் பாதி பகுதி மிடில் ஸ்டம்பிற்கு மேல் இருந்தது எனக்கூறி அம்பயர்ஸ் கால் கொடுத்து நாட் அவுட் முடிவையே கொடுத்தனர். ஆனால் கோலியின் ஆராய்ச்சியில் கிடைத்த பதில் வேறு.

விராட் கோலி முடிவு
ஸ்கிரீனில் நீண்ட நேரம் உற்றுப்பார்த்த அவர், அவுட் என முடிவு கொடுத்தார். அருகில் இருந்த இஷான் கிஷானிடம் அவுட் தானே அது எனவும் பரிந்துரை கேட்டார். அதற்கு இஷான் கிஷான், நாட் அவுட் முடிவு வந்துவிட்டது எனக்கூறியதும் கோலி ஏமாந்துப்போனார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. கோலி ஒரு போட்டியில் இருந்தால் சுவாரஸ்யங்களுக்கு பஞ்சம் இருக்காது என்பது மற்றொருமுறை நிரூபணம் ஆகியுள்ளது.


Click it and Unblock the Notifications