பொய் புகார் சொன்ன வங்கதேசம்.. விராட் கோலி செய்த நெகிழ்ச்சி செயல்.. சான்சே இல்லாத வேற லெவல் பதிலடி
மெல்போர்ன்: டி20 உலககோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி Fake fielding செய்தததாக அந்நாட்டு வீரர் நுருல் ஹசன் குற்றச்சாஞ்டி இருந்தார்.
இதனால் எங்களுக்கு 5 ரன்கள் கிடைக்கவில்லை என்று அவர் கூறியிருந்தார். ஆனால் விதிப்படி பேட்ஸ்மேன்கள் Fake Fielding ஆல் பேட்ஸ்மேன்கள் பாதிக்கப்பட்டால் மட்டுமே 5 ரன்கள் பெனால்டி தர முடியும்.
களத்தில் இருந்த பேட்ஸ்மேன்கள் இது குறித்து புகார் அளிக்காத நிலையில், நடுவர்கள் மீது பொய்யான காரணம் கூறியதால், நுருல் ஹசன் மீது நடவடிக்கை எடுக்க ஐசிசி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

திருவள்ளூவர் வழி
வங்கதேசம் சொன்ன புகார் விராட் கோலியின் பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் இருந்தது. நம் மீது யாராவது புகார் சொன்னால் ஒன்று கோபம் வரும். இல்லை இது பொய்யான குற்றச்சாட்டு என்று விளக்கம் கொடுப்போம். ஆனால், விராட் கோலி செய்த காரியம் வேற லெவலுக்கு இருந்தது. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ்ச் செய்து விடல் என்ற திருக்குறளுக்கு எடுத்து காட்டாக ஒரு சம்பவம் செய்தார்.

லிட்டன் தாஸ்
வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் அதிரடியாக விளையாடி லிட்டான் தாஸ் 27 பந்தில் 60 ரன்கள் விளாசினார். இதில் 7 பவுண்டரிகளும், 3 சிக்சரும் அடங்கும். லிட்டன் தாஸ் களத்தில் நின்ற வரை இந்தியாவின் வெற்றி வாய்ப்பு கானல் நீர் போல் இருந்தது. எனினும் அவர் ஆட்டமிழந்ததும் வங்கதேசமும் தோல்வியை தழுவியது.

பரிசளிப்பு
இந்த நிலையில், லிட்டன் தாஸை பாராட்டும் வகையில், விரட் கோலி அவருடைய பேட் ஒன்றை பரிசதக கொடுத்துள்ளார். இதனால் லிட்டன் தாஸ் மகிழ்ச்சியில் உள்ளார். புகார் சொன்ன அணியினருக்கு தனது பேட்டை பரிசாக கொடுத்து, வங்கதேச வீரர்கள் மற்றும் ரசிகர்களின் வாயை அடைத்து, கோலி சம்பவம் செய்து இருக்கிறார்.

அரையிறுதி வாய்ப்பு
இதனிடையே , வங்கதேச அணி அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என்றால், அந்த அணி பாகிஸ்தானை வீழ்த்த வேண்டும். அதே சமயம், நெதர்லாந்திடம் தென்னாப்பிரிக்கா தோல்வியை தழுவ வேண்டும். அதற்கு வாய்ப்பு குறைவு என்பதால், வங்கதேச அணி வெளியேறுவது கிட்டதட்ட உறுதி. வரும் ஞாயிற்றுகிழமை காலை 9.30 மணிக்கு இந்திய நேரப்படி வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications