
வெற்றி வாய்ப்பு
தற்போது மூன்றாம் நாள் தொடக்கத்தில் டிராவிஸ் ஹேட், ஸ்மித் ஆகியோரின் விக்கெட்டுகளை அஸ்வின் அடுத்தடுத்து வீழ்த்தினார். மேலும் லாபஸ்சேன் விக்கெட்டை ஜடேஜா கைப்பற்ற தற்போது சரிவு ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவை 150 ரன்களுக்குள் சுருட்டினால் மட்டுமே இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.

நடுவர் தவறு
இந்த நிலையில் நேற்று பேட்டிங் செய்யும்போது விராட் கோலிக்கு தவறான முறையில் அவுட் வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பந்து காலிலும் பேட்டிலும் ஒரே சமயத்தில் பட்டது. இப்படி நடைபெறும் பட்சத்தில் பேட்ஸ்மேனுக்கு சாதகமான தீர்ப்பை வழங்க வேண்டும் என்பது ஐசிசி விதி இருக்கிறது.ஆனால் இதனை கண்டு கொள்ளாத நடுவர்கள் தெளிவான ஆதாரம் இல்லாத நிலையில் பந்து காலில் தான் முதலில் பட்டது என முடிவெடுத்து அவுட் கொடுத்தார்.

கடுப்பான கோலி
இதனால் கடுப்பான விராட் கோலி வீரர்கள் அறையில் உள்ள டிவியில் தாம் ஆட்டம் இழந்ததை பார்த்தார். இது நடுவர் மீது தவறு இருப்பதை உணர்ந்த விராட் கோலி கடுமையாக கோபம் கொண்டார். மேலும் இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்த நிலையில் கோலியும்,டிராவிட்டும் ஒன்றாக இணைந்து ஆலோசனை நடத்தினார்கள். அணியில் என்ன செய்ய வேண்டும் வெற்றிக்கு என்ன பண்ண வேண்டும் என்பது குறித்து தீவிரமாக பேசி வந்தனர்.
கோலியின் ரியாக்சன்
அப்பொழுதுதான் இந்த காமெடி நடைபெற்றது. அணி நிர்வாகி ஒருவர் விராட் கோலிக்கு மதிய உணவை எடுத்து வந்தார். அப்போது மிகவும் முக்கியமாக பேசிக் கொண்டிருந்த விராட் கோலி உணவை பார்த்ததும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கையை தட்டினார். பிறகு அச்சச்சோ முக்கியமான காரியம் பேசி வருகிறோம் என நினைவுக்கு வந்து உணவை அங்க வைத்து விடுங்கள். நான் மீண்டும் வருகிறேன் என்று சைகையில் கூறினார். இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்து பலரும் விராட் கோலி சாப்பாடு என்று வந்தவுடன் நம்மைப் போலவே முக்கியத்துவம் கொடுப்பதாக நெட்டிஸன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











