Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணிக்கு ஆடலைனா என்ன எங்க டீமுக்கு ஆடுங்க.. விராட் கோலிக்கு அழைப்பு விடுத்த கவுன்டி அணி!

லண்டன்: இந்திய டெஸ்ட் அணியில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற்றிருக்கும் நிலையில், அவருக்கு இங்கிலாந்து கவுன்டி அணி ஒன்று அழைப்பு விடுத்துள்ளது. தங்கள் அணியில் விளையாட வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இதை அடுத்து லண்டனில் குடும்பத்தினருடன் தங்கி இருக்கும் விராட் கோலி இனி இங்கிலாந்து கவுன்டி டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

36 வயதாகும் நிலையில் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து இருக்கிறார். அவர் இன்னும் இரண்டு ஆண்டுகள் வரை டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்று எதிர்பார்ப்பு இருந்தது. மேலும் 10,000 ரன்கள் உள்ளிட்ட பல்வேறு மைல்கல் சாதனைகளை அவர் எட்டுவார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் சில ஆண்டுகளாக அவரது டெஸ்ட் பேட்டிங் ஃபார்ம் சரிவைச் சந்தித்து இருக்கும் நிலையில், பிசிசிஐயில் அழுத்தத்தால் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்தார்.

Virat Kohli Receives Invitation to Play County Cricket After Test Retirement

இந்த நிலையில், இங்கிலாந்து கவுன்டி அணிகளில் ஒன்றான மிடில்செக்ஸ் (Middlesex), விராட் கோலிக்கு அழைப்பு விடுத்துள்ளது. அந்த அணியின் இயக்குனர் ஆலன் கோல்மன் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இது குறித்துப் பேசியுள்ளார்.

"இந்தத் தலைமுறையின் மிகச்சிறந்த வீரர் விராட் கோலி. எனவே, விராட் கோலியிடம் எங்கள் அணிக்கு விளையாட வருமாறு அழைப்பு விடுப்பது மிகவும் சுவாரசியத்தை அளிக்கும். அதற்கான முயற்சிகளைச் செய்வோம்" என்று அவர் கூறியிருக்கிறார்.

இதை அடுத்து விராட் கோலி இங்கிலாந்து மண்ணில் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். இதுவரை விராட் கோலி இங்கிலாந்து கவுன்டி போட்டிகளில் விளையாடியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2018 ஆம் ஆண்டு ஒருமுறை அவர் சர்ரே (Surrey) அணிக்காக விளையாடுவதாக இருந்தது. அதற்கான ஒப்பந்தமும் கைகூடியது.

அப்போது இங்கிலாந்து தொடருக்கு முன்பாக பயிற்சி பெறும் வகையில் ஒரு போட்டியில் விளையாடுவதற்கு விராட் கோலி விரும்பினார். அப்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு போட்டியும் இருந்தது. இந்த இரண்டு போட்டிகளிலும் விளையாடி அந்தத் தொடருக்காக விராட் கோலி தன்னை தயார் செய்வார் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அப்போது அவருக்குக் கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டு போட்டிகளிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பிறகு விராட் கோலி எப்போதும் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடியதில்லை.

Story first published: Saturday, May 17, 2025, 21:05 [IST]
Other articles published on May 17, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+