விராட் கோலியின் சொத்து மதிப்பு கிடுகிடு உயர்வு.. பிரபலங்கள் வரிசையில் இந்தியாவின் நம்பர் 1
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் சொத்து மதிப்பு கிடு கிடுவென உயர்ந்து இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள பிரபலங்கள் சினிமா நட்சத்திரங்கள் விளையாட்டு வீரர்களின் சொத்து மதிப்பை கணக்கிடும்போது விராட் கோலி இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.
விராட் கோலி இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். எனினும் கடந்த சில ஆண்டுகளாக அவர் பார்ம் அவுட் ஆகி இருந்தார். மேலும் எந்த போட்டிகளிலும் சதம் அடிக்கவில்லை.

இதன் காரணமாக விராட் கோலியின் சொத்து மதிப்பு சரிவை சந்தித்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ள விராட் கோலி கடந்த 2023 ஆம் ஆண்டு உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்தார். இதேபோன்று நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் விராட் கோலி தான் ஆரஞ்சு நிற தொப்பி வென்றிருக்கிறார்.
இதன் மூலம் விராட் கோலியின் மவுசு அதிகரித்து இருக்கிறது. இதுதான் மேலும் பல விளம்பரங்களில் மாடலாக அறிமுகமான விராட் கோலி காட்டில் பணமழை பொழிகிறது. 2023 ஆம் ஆண்டு முடிவில் தன்னுடைய சொத்து மதிப்பு 29 சதவீதம் அளவு உயர்ந்து இருக்கிறது. குருல் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி விராட் கோலியின் சொத்து மதிப்பு 1894 கோடி ரூபாயாக இருக்கின்றது.
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் சொத்து மதிப்பு 1693 கோடி ரூபாயாக இருக்கிறது. இந்த பட்டியலில் ஷாருக்கான் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு ஆயிரத்து ஒரு கோடி ரூபாயாக இருக்கிறது. இந்த பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடந்த ஆண்டை விட ஒரு இடம் முன்னேறி இருக்கிறார்.
தோனியின் சொத்து மதிப்பு 799 கோடி ரூபாயாக இருக்கிறது. முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சொத்து மதிப்பு 2023 ஆம் ஆண்டு முடிவில் 761 கோடி ரூபாயாக உள்ளது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் தோனி சச்சின் ஆகியோர் தொடர்ந்து விளம்பரங்களில் நடித்து வருவதன் மூலம் இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications