
அழகான புகைப்படம்
மும்பையில் உள்ள வீட்டில் தனது மனைவி, குடும்பத்துடன் பொழுதைக் கழித்து வருகிறார் கோலி. தனது இன்ஸ்டாவில் அவர் போட்டுள்ள படம் முன்பு எடுத்ததாகும். அழகான இயற்கை எழில் சூழ்ந்த அந்த இடத்தில் அமைதியாக அமர்ந்து ரசித்துக் கொண்டுள்ளனர் கோலியும், அனுஷ்காவும். அந்தப் போட்டோவுடன், இதுபோன்ற அழகான இயற்கை எழில் கொஞ்சும் இடத்திற்கு நம்மால் முன்பு போக முடிந்தது என்று தெரிவித்துள்ளார்.

அனுஷ்காவுடன் ஜோடியாக
இணைந்து அமர முடிந்தது. எல்லாவற்றையும் மறந்து மகிழ முடிந்தது. எனது ஒன் அன்ட் ஒன்லியுடன் நான்.. என்று தனது மனைவியுடன் ரசித்த அந்த அருமையான பொழுதை நினைவு கூர்ந்துள்ளார் விராட் கோலி. இந்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் கமெண்ட்டுகளைக் குவித்துக் கொண்டுள்ளனர்.

அதிக பாதிப்பு
இந்தியாவிலேயே அதிக அளவிலான கொரோனா பாதிப்பு மும்பையில்தான். படு வேகமாக அங்கு கொரோனா பரவிக் கொண்டுள்ளது. அதேபோல கோலியின் சொந்த ஊரான டெல்லியிலும் அதிக அளவிலான பாதிப்பு உள்ளது. இந்தியாவிலேயே 2வது அதிக பாதிப்பு டெல்லியில்தான். இந்த நிலையில்தான் இப்படி ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் கோலி.

விரக்தியுடன் பொழுது போகிறது
கோலியும் மற்ற வீரர்களும் தற்போது சோசியல் மீடியாவில்தான் அதிகம் பிசியாக உள்ளனர். அடிக்கடி சாட் செய்வது, கருத்துக்களைப் பதிவிடுவது என பொழுது போய்க் கொண்டுஉள்ளது. கண்ணுக்கு எட்டியவரை கிரிக்கெட் போட்டிகள் எதுவும் தொடங்குவதாகத் தெரியவில்லை என்பதால் வீரர்களும் கூட லேசாக விரக்தி அடைய ஆரம்பித்துள்ளனர். எப்படா பேட்டை எடுப்போம் வெளுப்போம்னு புலம்ப ஆரம்பித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











