Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் கோஹ்லிக்கு ஓய்வு.. யுவராஜ் சிங்கிற்கு மீண்டும் வாய்ப்பு

மும்பை: இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஆட உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோஹ்லிக்கு ஓய்வு தரப்பட்டுள்ள நிலையில், உமேஷ் யாதவ் வெளியேற்றப்பட்டுள்ளார். இவ்விருவருக்கும் பதிலாக பவன் நேகி மற்றும் அஜிங்ய ரஹானே அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தினேஷ் சண்டிமால் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. முதல் போட்டி இம்மாதம் 9ம் தேதி தொடங்குகிறது.

Virat Kohli rested for T20I series vs Sri Lanka

இந்த போட்டித்தொடருக்கான இந்திய அணி இன்று பிசிசிஐ தேர்வுக்குழுவால் அறிவிக்கப்பட்டது.

டோணி தலைமையிலான இந்திய அணி விவரம்: ரோகி்த் ஷர்மா, தவான், ரஹானே, ஹர்திக் பண்டியா, மனிஷ் பாண்டே, ரெய்னா, யுவராஜ்சிங், ஜடேஜா, அஸ்வின், பும்ரா, நெஹ்ரா, ஹர்பஜன்சிங், புவனேஸ்வர் குமார், பவன்குமார் நேகி.

ஆஸ்திரேலிய டி20 தொடரில் தொடர் நாயகன் விருது வாங்கிய விராட் கோஹ்லிக்கு, இந்த தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்துவரும், ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை டி20 தொடருக்காக கோஹ்லிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Story first published: Monday, February 1, 2016, 17:45 [IST]
Other articles published on Feb 1, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+