ஐசிசி ஒருதினப் போட்டி தரவரிசை.... முதலிடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டார் கோஹ்லி!
Recommended Video

டெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான ஒருதினப் போட்டித் தொடரை இந்தியா இழந்தாலும், இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை தக்க வைத்தார்.
ஐசிசி தரவரிசை இன்று வெளியிடப்பட்டது. இதில் 911 புள்ளிகளுடன் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 75, 45, 71 ரன்கள் எடுத்ததன் மூலம், கோஹ்லிக்கு கூடுதலாக 2 புள்ளிகள் கிடைத்தன. இந்தத் தொடரில் இரண்டு சதங்கள் அடித்த இங்கிலாந்தின் ஜோ ரூட் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
இந்தியாவின் ரோஹித் சர்மா 4வது இடத்திலும், ஷிகார் தவான் 10வது இடத்திலும் உள்ளனர். தோனி 14வது இடத்தில் உள்ளார்.
பவுலர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் குல்தீப் யாதவ் 6வது இடத்தைப் பிடித்தார். 14வது இடத்தில் இருந்த குல்தீப், இந்தத் தொடரில் 9 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் முதல் முறையாக டாப் 10க்குள் நுழைந்தார். இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல் 10வது இடத்திலும் அக்சர் படேல் 15வது இடத்திலும் உள்ளனர்.
அணிகளுக்கான தரவரிசையில் ஏற்கனவே முதலிடத்தி்ல் உள்ள இங்கிலாந்துக்கு மேலும் ஒரு புள்ளி கிடைத்தது. அதே நேரத்தில் இந்தியாவுக்கு ஒரு புள்ளி குறைந்தது. இருப்பினும் 2வது இடத்தில் தொடர்கிறது.


Click it and Unblock the Notifications