Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Virat Kohli : விராட் கோலி ஓய்வுக்கு காரணம் என்ன? கம்பீர் செய்த வேலை.. மனமுடைந்த கிங்

மும்பை:

Virat kohli retirement
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி இந்திய அணியை 68 போட்டிகளில் கேப்டனாக வழி நடத்தியிருக்கிறார். மொத்தம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 9230 ரன்கள் அடித்திருந்த விராட் கோலி, சராசரியாக 46 ரன்கள் வைத்திருந்தார்.

விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் 30 சதமும், 31 அரைசதமும் அடித்திருந்தார். இந்த சூழ்நிலையில் விராட் கோலி இங்கிலாந்து தொடருக்கு முன்பாக திடீரென்று ஓய்வு முடிவை அறிவித்ததற்கான காரணம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம். பார்டர் கவாஸ்கர் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி அபாரமாக சதம் அடித்தார். இதனால் கோலி மீண்டும் ஃபார்முக்கு வந்துவிட்டார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் விராட் கோலி இடம் ஆப் சைடுக்கு வெளியே செல்லும் பந்தை அடிப்பதற்கு மிகப்பெரிய பிரச்சனை இருந்தது. இதனை எதிர்கொள்ள முடியாமல் விராட் கோலி கடுமையாக தடுமாறினார். இந்த வீக்னஸை போக்க விராட் கோலி கடும் முயற்சிகள் எடுத்தும் அவரால் முடியவில்லை.

மேலும் பயிற்சியாளர் கம்பீரின் செயல்பாடுகள் பிடிக்காமலேயே விராட் கோலி அணியை விட்டு செல்வதாகவும் கூறப்படுகிறது. கம்பீர் தான் தோன்றித்தனமாக நடப்பதாகவும் வீரர்களின் அறிவுரைகளை கேட்பதில்லை என்றும் சீனியர் வீரர்கள் நினைக்கின்றனர். இதன் காரணமாக விராட் கோலி வெறும் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடினால் போதும் என்ற முடிவை எடுத்து விட்டார்.

இதேபோன்று இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக மீண்டும் செயல்பட விராத் கோலி முடிவெடுத்தார் என தெரிகிறது. ஆனால் அதற்கும் பிசிசிஐ ஒப்புக்கொள்ளவில்லை என்ற தகவலும் வெளியானது. 36 வயதான விராட் கோலி குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட விருப்பம் தெரிவிக்கிறார்.

ஆனால் தற்போது சீனியர் வீரர்களும் ரஞ்சி கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ அறிவுறுத்தி வருவதால் குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடியாது என்பதற்காக இந்த முடிவை கோலி எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதுதான் முக்கிய காரணமாக இருக்கும் என்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர் .

Story first published: Monday, May 12, 2025, 12:39 [IST]
Other articles published on May 12, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+