விராட் கோலி ரிட்டர்ன்ஸ்: 12 ஆண்டுகளுக்கு பிறகு ரஞ்சிக்கு திரும்பும் கிங் கோலி.. எந்த தேதி தெரியுமா?
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, ரஞ்சி போட்டிக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு விளையாடப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என பிசிசிஐ கண்டிப்புடன் கூறியிருந்தது.
ஆனால் சமீப காலமாக நடைபெறும் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி , ரோகித் ஆகியோர் மோசமாக விளையாடி வருகின்றனர். குறிப்பாக இந்திய அணியின் ஸ்டார் வீரரான விராட் கோலி பார்டர் கவாஸ்கர் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தாலும் அடுத்த நான்கு டெஸ்ட் போட்டிகளும் சேர்ந்து மொத்தமாகவே 90 ரன்கள் தான் சேர்த்தார்.

மேலும் விராட் கோலி தொடர்ந்து ஒரே மாதிரி ஆட்டம் இழந்து வந்தது ரசிகர்களை எரிச்சல் அடையச் செய்தது. ரோகித் சர்மாவும் ஆஸ்திரேலியா தொடரில் மொத்தமாகவே 32 ரன்கள் தான் சேர்த்தார். இதனால் ரோகித் சர்மா ரஞ்சி போட்டியில் தான் விளையாட போவதாக அறிவித்தார்.
கில், ரிஷப் பந்த் உள்ளிட்ட மற்ற வீரர்களும் ரஞ்சிப் போட்டிக்கு திரும்பிய நிலையில் விராட் கோலி மட்டும் மௌனம் காத்து வந்தார். இந்த நிலையில் ஜனவரி 23ஆம் தேதி சௌராஷ்டிரா அணிக்கு எதிரான டெல்லி விளையாடும் ரஞ்சிப் போட்டியில் விராட் கோலி பங்கேற்க மாட்டார் என உறுதியான தகவல் வெளியானது. ஆனால் ஜனவரி 30 ஆம் தேதி ரயில்வேஸ் அணிக்கு எதிராக நடைபெறும் ரஞ்சிப் போட்டியில் விராட் கோலி பங்கேற்க முடிவெடுத்திருக்கிறார்.
இதன்மூலம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு விராட் கோலி ரஞ்சி கிரிக்கெட்டில் ஆட உள்ளார் இந்த தகவலை டெல்லி கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் உறுதிப்படுத்தி இருக்கிறார். எனினும் இந்தப் போட்டி பிப்ரவரி 2ஆம் தேதி வரை நடைபெறும் அதன் பிறகு இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர் நடைபெற இருக்கிறது.
இந்த தொடருக்கும், ரஞ்சி போட்டிக்கும் இடையே மூன்று நாட்கள் தான் உள்ளது என்பதால் இதில் விராட் கோலி சொன்னபடி பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இனி இந்திய அணி அடுத்த ஜூன் மாதம் தான் இங்கிலாந்து எதிராக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சீனியர் வீரர்கள் ரஞ்சிப் போட்டியில் விளையாடுவதை ஒரு தண்டனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா வலியுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Tuesday, January 21, 2025, 9:48 [IST]
Other articles published on Jan 21, 2025


Click it and Unblock the Notifications