
தொகுப்பாளர் கிண்டல்
அதற்கு விராட் கோலி ரொம்ப பிடிக்கும். ஆனால் வீட்டில் ஏதும் தற்போது வளர்க்கவில்லை என கூறினார். அதற்கு தொகுப்பாளர் ஏன் பொய் சொல்றீங்க, நீங்க தான் 2 டக் வாங்கியதை டிவியில் இந்த உலகமே பார்த்துச்சே என்று கூறியதும், விராட் கோலி வெட்கத்தில் தலைக்குனிந்து சிரித்தார்.

உதவியற்றவனாக நின்றேன்
அதன் பிறகு பேசிய கோலி, என் கிரிக்கெட் வாழ்வில் தொடர்ந்து 2 முறை கோல்டன் டக் ஆனது இல்லை. இப்படி நடந்ததே அல்ல. அப்போது தான் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு உதவியற்றவன் எப்படி உணர்வார்கள் என்பதை நானும் உணர்ந்தேன். வாழ்க்கையில் அனைத்தையும் பார்த்து விட்டேன், ரொம்ப நாட்களுக்கு பிறகு டக் ஆனதால் என்னை அறியாமலேயே சிரித்துவிட்டேன் என்றார்.

டுபிளஸிஸ் அழகானவர்
டுபிளஸிஸ் தற்போது உங்களை விட அழகாக இருப்பதால் உங்களுக்கு பொறாமையாக இல்லையா என்று தொகுப்பாளர் கேள்வி கேட்க, அப்படி ஏதும் இல்லை. நான் அவரை மதிக்கின்றேன். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். அவர் என்னை விட அழகானவர் என்பதில் மாற்று கருத்து இல்லை. நான் ஏதாவது அறிவுரை கூறினாலும், அது அவருக்கு பிடிக்கவில்லை என்றால் முகத்துக்கு முன்னாடியே கூறிவிடுவார்.
Recommended Video

ஆச்சரியமாக இருந்தது
என் மனைவி அனுஷ்கா சர்மா பிறந்து வளர்ந்தது பெங்களூருவில் தான். பெங்களூருவில் எனக்கு பப்ஸ் ரொம்ப பிடிக்கும். இதனை வாங்குவதற்கு ஒரு முறை நான் மாஸ்க் அணிந்து சென்றேன். என் கிரடிட் கார்டில் எனது பெயர் இருந்தது. ஆனால் அந்த ஊழியர், அதை பார்க்க கூட நேரமில்லாமல் தனது வேலையை செய்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.


Click it and Unblock the Notifications