Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எனக்கு எப்பவும் அவர் கூட விளையாட பிடிக்காது... பேட்டியில் உண்மைகளை கொட்டிய கோஹ்லி.. வீடியோ

டெல்லி: இந்தியா இலங்கைக்கு எதிராக டெல்லியில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிக் கொண்டு இருக்கிறது. நேற்று இரண்டாவது நாள் போட்டி முடிந்த பின் இந்திய வீரர்கள் இடையே நிறைய சுவாரசியமான சம்பவங்கள் நடந்தது.

இதில் முக்கியமாக இந்திய பேட்ஸ்மேன் புஜாரா, கேப்டன் கோஹ்லியை பேட்டி எடுத்தார். அவரின் இந்த ஒருநாள் ரிப்போர்ட்டர் அவதாரம் காரணமாக அங்கு நிறைய காமெடி நடந்தது.

கோஹ்லி இந்த பேட்டியில் சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். முக்கியமாக அவர் தனக்கு எந்த வீரருடன் விளையாட பிடிக்காது என்றும் பேட்டியில் கூறியுள்ளார்.

இரட்டை சதம்

இரட்டை சதம்

முதலில் கோஹ்லியிடம் புஜாரா இரட்டை சதம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு கோஹ்லி "எப்போது எனக்கு செஞ்சுரிகள் அடிக்க பிடிக்கும். அதை அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே செல்வதும் பிடிக்கும். எப்போதும் செஞ்சுரி எடுத்தவுடன் போதும் என்று விட மாட்டேன். அதைவிட அதிக ரன்கள் எடுக்கவே முயற்சி செய்வேன்'' என்று கூறினார்.

எந்த வீரரை பிடிக்காது

எந்த வீரரை பிடிக்காது

இதே பேட்டியில் அவர் தனக்கு பிடிக்காத வீரர் குறித்தும் கூறியுள்ளார். அதில் ''எனக்கு புஜாராவை பிடிக்காது. அவர் எல்லா போட்டியிலும் என்னை வென்றுவிடுகிறார். டென்னிஸ், கால் பந்து என எல்லாவற்றிலும் அவர் வெற்றி பெறுகிறார். புஜாரா சிறிய தவறு கூட செய்வதில்லை. அதனால் அவருடன் விளையாடுவது கஷ்டமாக இருக்கிறது'' என்று கூறினார். பேட்டி எடுத்த புஜாரா இதை எதிர்பார்க்காமல் சிரித்துக் கொண்டு இருந்தார்.

புஜாரா ரோல் மாடல்

இந்த நிலையில் அவர் புஜாரா குறித்து இன்னும் நிறைய பேசினார். அதில் ''புஜாரா எனக்கு ஒருவகையில் ரோல் மாடல். எனக்கு தொடக்கத்தில் டெஸ்ட் போட்டிகள் விளையாட பிடிக்காது. இப்போது நான் பொறுமையாக அதிக நேரம் களத்தில் இருக்க காரணம் புஜாராதான். அவரிடம் பொறுமையாக இருக்க கற்றுக் கொண்டேன்'' என்று புஜாரா குறித்து பெருமையாக பேசி இருக்கிறார்.

மாற்றி பேசிய கோஹ்லி

மாற்றி பேசிய கோஹ்லி

இதற்கு முன்பே கோஹ்லி புஜாரா குறித்து பேட்டி அளித்து இருக்கிறார். இதற்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில் புஜாரா மிகவும் பொறுமையாக ஆடுகிறார். இன்னும் கூட கொஞ்சம் அதிரடியாக ஆடவேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். தற்போது அவரிடம் இருந்து கோஹ்லி பொறுமையை கற்றுக் கொண்டுள்ளதாக கூறியுள்ளார். இதேபோல் கோஹ்லி இந்திய அணியில் இருக்கும் சில புதிய பிளேயர்கள் குறித்தும் கருத்து தெரிவித்தார்.

Story first published: Monday, December 4, 2017, 15:47 [IST]
Other articles published on Dec 4, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+