என் புருஷன் இவ்ளோ அறிவாளியா.. கோலியைப் பார்த்து வாய் பிளந்த அனுஷ்கா!
மும்பை : சமூக வலைதளங்களில் இப்போது பிரபலமாக உள்ள "Guess the gibberish" போட்டியில் விராட் கோலி காட்டிய திறமையைப் பார்த்து அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆச்சரியத்தில் வாயைப் பிளந்த கதைதான் இப்போது வைரலாகியுள்ளது.
இது ஜம்ப்ள்ட் சென்டன்ஸ் என்று சொல்வோம் இல்லையா.. அந்த விளையாட்டுதான். அதாவது வார்த்தைகளை மாற்றி மாற்றிப் போட்டு கேட்பார்கள். நாம் சரியான வார்த்தையைக் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும். இதுதான் போட்டி.
இன்ஸ்டாகிராமில் இது இப்போது பிரபலமாக உள்ளது. இதில்தான் விராட் கோலி வித்தையைக் காட்டி மனைவியை அசர வைத்துள்ளார். தற்போது கொரோனாவைரஸ் லாக்டவுன் காரணமாக மனைவி மற்றும் குடும்பத்தினருடன் நன்றாகப் பொழுது போக்கிக் கொண்டிருக்கிறார் விராட் கோலி.

விதம் விதமாக விளையாட்டு
விராட் கோலியும் அனுஷ்கா சர்மாவும் வீட்டில் விதம் விதமாக விளையாடி பொழுதைக் கழிக்கின்றனர். அவ்வப்போது சமூக வலைதளங்களில் புகுந்து கொள்கின்றனர். அப்படித்தான் இந்த விளையாட்டில் ஈடுபட்டனர். இதில் அனுஷ்கா சர்மாவை விட விராட் கோலிதான் கலக்கியுள்ளார். அனுஷ்கா எதில் எல்லாம் சொதப்பினாரோ அதில் எல்லாம் விராட் கோலி புகுந்து விளையாடியுள்ளார்.

கோலி திறமை... அனுஷ்கா வியப்பு
இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் போட்டு விராட் கோலியின் திறமையை வியந்து பாராட்டியுள்ளார் அனுஷ்கா சர்மா. பையனுக்கு எல்லாம் தெரியும் என்று கோலியை அனுஷ்கா பாராட்டியுள்ளார். சமூக வலைதளங்களில் இவர்கள் இருவரும் போட்டு வரும் ஒவ்வொரு பதிவும் ஹிட்டாகி வருகிறது. வைரலாகின்றன. காரணம் ரசிகர்கள் விடாமல் இவர்களை பின் தொடர்ந்து கொண்டுள்ளனர். சமீபத்தில் தனது கணவரை டீஸ் செய்து அனுஷ்கா போட்ட வீடியோ வைரலானது.

லாக்டவுனால் முடக்கம்
அதேபோல கொரோனாவைரஸ் லாக்டவுன் தொடர்பாகவும், மக்கள் கவனமுடன் இருக்க வேண்டியது குறித்தும் விழிப்புணர்வு வீடியோவையும் இருவரும் சேர்ந்து வெளியிட்டிருந்தனர். மேலும் வீட்டு வன்முறை தொடர்பாகவும் ஒரு வீடியோ போட்டிருந்தனர். தற்பொழுது கொரோனா காரணமாக சினிமா ஷூட்டிங் நடைபெறவில்லை. விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறவில்லை.

போட்டிகள் ரத்து
இந்த நிலையில் சமூக வலைதளங்கள் மூலமாகத்தான் அனைவரும் மக்களுடன் உரையாடியபடி உள்ளனர். இந்தியாவிலும் முக்கியமான கிரிக்கெட் தொடரான ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை. ஒத்திவைத்து விட்டனர். அதேபோல பிற போட்டிகளும் நடைபெறவில்லை. ஒலிம்பிக் போட்டியும் கூட ஒத்திப் போய் விட்டது என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications