பும்ராவுக்கு ஆண்டிற்கு ரூ. 7 கோடி சம்பளம்… இது தோனிக்கு கூட இப்படி இல்லையே.. !!
Recommended Video

மும்பை:ஆண்டிற்கு ரூ. 7 கோடி சம்பளம் பெறும் A+ பிரிவிற்குள், பல போராட்டங்களுக்கு பிறகு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா இடம்பிடித்துள்ளார். தல தோனிக்கு கூட அதில் இடம்கிடைக்கவில்லை.
இந்திய கிரிக்கெட் நிர்வாக அமைப்பான பிசிசிஐ, வீரர்களுக்கு 4 பிரிவுகளில் ஊதியம் வழங்கி வருகிறது. ஏ பிளஸ், ஏ, பி, சி என்று 4 வகையாக வீரர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆண்டுதோறும் சம்பள ஒப்பந்தம் செய்யப்படுகிறது.
மிகச் சிறப்பாக விளையாடும் வீரர்கள் ஏ பிளஸ் பிரிவில் ஒப்பந்தம் செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. இதுபோக, ஒவ்வொரு போட்டிகளுக்கும் என தனித்தனியாக ஊதியம் வழங்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான 2018-2019ம் ஆண்டுக்கான ஒப்பந்தத்தை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் பல ஆச்சரியமாக அம்சங்கள் இடம்பெற்று உள்ளன.

திறமை
திறமை மற்றும் அவர்களின் நன்னடத்தையை அடிப்படையாகக் கொண்டு A+, A, B, C போன்ற 4 பிரிவுகளின்கீழ் இந்திய கிரிக்கெட் வீரர்கள் வகைப்படுத்தப்படுவார்கள். கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக வீரர்களுக்கு ஓராண்டு வீதம் கொடுக்கப்படும் ஊதியமானது மேற்கண்ட இந்த 4 பிரிவுகளின்கீழ் தான் வழங்கப்படும்.

7 கோடி ரூபாய்
A+ பிரிவில் இடம்பிடித்திருக்கும் வீரர்களுக்கு ரூ. 7 கோடியும், A பிரிவு வீரர்களுக்கு ரூ. 5 கோடியும், B பிரிவினருக்கு ரூ. 3 கோடியும், C பிரிவு வீரர்களுக்கு ரூ. 1 கோடியும் என ஆண்டு ஒப்பந்த ஊதியம் வழங்கப்படும். 2018 அக்டோபர் - 2019 செப்டம்பர் வரையிலான வீரர்கள் பிரிவு பட்டியலில் இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா உச்சபட்ச பிரிவை அடைந்து தற்போது சாதனை படைத்துள்ளார்.

முன்னேற்றத்தில் பும்ரா
சமீபத்திய போட்டிகளில் பலம் வாய்ந்த ஜாம்பவான் அணிகளை பந்தாடிய இந்திய பவுலர் என்ற பெருமை ஜஸ்பிரீத் பும்ரா வசம் உள்ளது. இந்திய அணியின் சிறந்த டெத் ஓவர் பவுலர் எனும் மகத்தான பெயருக்கு சொந்தமான பும்ரா தமது அபாரமான திறமையால் தற்போது A+ பிரிவிற்குள் நுழைந்துள்ளார். கேப்டன் விராத் கோலி மற்றும் ஹிட்-மேன் ரோகித் ஷர்மா உள்ளிட்ட 2 நட்சத்திரங்களை மட்டும் கொண்டிருந்த A+ பிரிவில் இப்போது 3-வது வீரராக கால் பதித்துள்ளார்.

தோனி இல்லை
தோனி இந்திய அணிக்கு என்னதான் சிறந்த கேப்டனாகவும், சிறந்த மேட்ச் ஃபினிஷராகவும் இருந்தாலும் அவர் கூட A+ பிரிவிற்குள் நுழைய இதுவரை அனுமதிக்கப்பட்டதில்லை. கடந்த 2011 உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு 10 இந்திய வீரர்களுடன் தோனியும் என மொத்தம் 11 பேர் A பிரிவில் இடம் பெற்றிருந்தனர். இது தான் தோனி இடம்பிடித்திருந்த மிகப்பெரிய பிரிவாகும்.

5 கோடிக்கான A பிரிவு
தோனி, ரிஷாப் பண்ட், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், சட்டீஸ்வர் புஜாரா, அஜிங்கியா ரஹானே, ஷிக்கர் தவான், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் A பிரிவில் இடம்பிடித்துள்ளனர்.

ரூ. 3 கோடிக்கான B பிரிவு
அண்மையில், பெண்கள் குறித்து தரக்குறைவாக விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் B பிரிவில் இடம்பெற்றுள்ளனர். இதேபோல், வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ், சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரும் B பிரிவில் இருக்கின்றனர்.

ரூ. 2 கோடிக்கான C பிரிவு
C பிரிவில் 7 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், அம்பத்தி ராயுடு, மானீஷ் பாண்டே, ஹனுமா விஹாரி, கலீல் அகமது, விருத்திமான் சஹா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications