Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முடிவுக்கு வரும் சகாப்தம்? உறைய வைத்த ரோஹித், கோலி.. 10 ரன்னை கூட தாண்டாத பேட்டிங் ஆவரேஜ்

பிரிஸ்பேன்: இந்திய அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் மிகவும் மோசமாக ஆடி வரும் நிலையில் 2024 ஆம் ஆண்டு அவர்கள் இருவரின் பேட்டிங் சராசரி குறித்த புள்ளி விவரம் ஒன்று அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

2024 ஆம் ஆண்டில் விராட் கோலி 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 17 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து இருக்கிறார். அதில் அவர் 376 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். ஒரு சதம் மற்றும் ஒரு அரை சதம் மட்டுமே அடித்து உள்ளார். அவரது பேட்டிங் சராசரி 25 என்பது ஆக உள்ளது.

ind vs aus border gavaskar trophy india vs australia test match vs

ஆனால், முதல் இன்னிங்ஸில் மட்டும் அவரது பேட்டிங் சராசரியை எடுத்துப் பார்த்தால் அது மிக மோசமாக 9.12 என்பதாக உள்ளது.

அதேபோல ரோஹித் சர்மாவின் பேட்டிங் சராசரியும் கவலைக்கிடமாக உள்ளது. 2024 ஆம் ஆண்டு ரோஹித் சர்மா 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் 24 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 67 ரன்கள் எடுத்து உள்ளார். இதன் பேட்டிங் சராசரி 26.39 என்பதாக உள்ளது. ஆனால், முதல் இன்னிங்ஸில் மட்டும் அவரது பேட்டிங் சராசரியை பார்த்தால் அது 8.85 என்பதாக உள்ளது.

அந்த அளவுக்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளின் முதல் இன்னிங்ஸ்களில் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து உள்ளனர். இது மிகவும் கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது. குறிப்பாக விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை செய்த வீரர் என்ற அடிப்படையில் பார்க்கும்போது அவர் நிச்சயம் தனது நிலையை உணர வேண்டும் என்பதே முன்னாள் வீரர்களின் கருத்தாக உள்ளது.

ரோஹித் சர்மாவை பொறுத்தவரை அனேகமாக அவருக்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரே கடைசி டெஸ்ட் தொடராக அமையவும் வாய்ப்பு உள்ளது. அந்த அளவுக்கு அவரது நிலை மோசம் அடைந்துள்ளது. மேலும், அவரது வயதையும் கருத்தில் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ரோஹித் சர்மா 10 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். விராட் கோலி 3 ரன்களில் ஆட்டம் இழந்தார். கே எல் ராகுல் அரைசதம் அடித்து தொடர்ந்து ரன் சேர்த்தார். ராகுல் மட்டுமே இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணிக்கு ஆறுதலாக அமைந்தார்.

Story first published: Tuesday, December 17, 2024, 7:58 [IST]
Other articles published on Dec 17, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+