Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"தல" போல வருமா.. விடாமல் குவியும் வாழ்த்துகள்.. பாராட்டு மழையில் தோனி

மும்பை: கூல் கேப்டனாக வலம் வந்த எம்எஸ் தோனிக்கு தொடர்ந்து பாராட்டுகளும், பிறந்த நாள் வாழ்த்துகளும் குவிந்தவண்ணம் உள்ளன. ரசிகர்கள் மட்டுமல்லாமல் சக வீரர்களும் பிரபலங்களும் பாராட்டித் தள்ளிக் கொண்டுள்ளனர்.

Recommended Video

Dhoni Birthday 2020 | Happy Birthday Dhoni

தோனிக்கு இன்று 39வது பிறந்த நாள். இதை தனது ராஞ்சி வீட்டில் குடும்பத்தினருடன் அமைதியாக கொண்டாடியுள்ளார் தோனி . ஆனால் ரசிகர்கள் நேற்றிலிருந்தே சமூக வலைதளங்களில் கொண்டாட ஆரம்பித்து விட்டனர். இன்னும் முடியாமல் போய்க் கொண்டே இருக்கிறது வாழ்த்துக்கள்.

பிரபல கிரிக்கெட் வீரர்களும் கூட தோனிக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்ட் போட்டு வருகின்றனர். கேப்டன் விராட் கோலி முதல் பலரும் வாழ்த்துகளை அளித்துள்ளனர்.

பிசிசிஐ குறும்படம்

பிசிசிஐ குறும்படம்

கோலி, ரவி சாஸ்திரி, வீரேந்திர ஷேவாக், வி.வி.எஸ்.லட்சுமண் என இந்தப் பட்டியல் ரொம்பவே நீளமாக இருக்கிறது. இந்திய கிரிக்கெட் வாரியமும் தோனிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. ஒரே மனிதன்.. எண்ணற்ற மகிழ்ச்சி. எம்எஸ் தோனியின் பிறந்த நாளை அவரது இமாலய சிக்சர்களைக் கண்டு மகிழ்ந்து கொண்டாடுவோம் என வீடியோ போட்டு வாழ்த்தியுள்ளது பிசிசிஐ.

கோலி வாழ்த்து

கோலி வாழ்த்து

கேப்டன் விராட் கோலியும் சூப்பராக வாழ்த்து தெரிவித்துள்ளார். தானும், தோனியும் இருக்கும் சூப்பரான ஸ்டில்களைப் போட்டுள்ள அவர், மஹி பாய் பிறந்த நாள் வாழ்த்துகள். நல்ல நலத்துடனும் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க வாழ்த்துகள். காட் பிளஸ் யூ என்று கூறி வாழ்த்தியுள்ளார் கோலி. இந்த டிவீட்டுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தோனியும் கோலியும் இணைந்திருப்பது சூப்பர் காட்சி அல்லவா.

ரோகித்தின் வாழ்த்து

ரோகித்தின் வாழ்த்து

அதேபோல தொடக்க ஆட்டக்காரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ரோகித் சர்மாவும் தோனிக்கு சூப்பர் கூல் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மிஸ்டர் கூலுடன் கூலாக ஒரு போட்டோ என்று இருவரும் ஜூஸ் குடிக்கும் படத்தைப் போட்டு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் ரோகித் சர்மா. ஐபிஎல்லில் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸும், ரோகித்தின் மும்பை இந்தியன்ஸும் செம வைரிகள் என்பது நினைவிருக்கலாம்.

சிட்டுவின் சில்மிஷ வாழ்த்து

சிட்டுவின் சில்மிஷ வாழ்த்து

அடுத்த வாழ்த்துதான் சூப்பர். அதை சொல்லியிருப்பவர் ஹர்திக் பாண்டியா. தானும், தோனியும் இருக்கும் படங்களைப் போட்டுள்ள அவர் என்னுடைய பிட்டுவுக்கு உங்களுடைய சிட்டுவின் வாழ்த்துகள். எனது நண்பர். எனக்கு எல்லாமும் கற்றுக் கொடுத்தவர்.. எனது மோசமான நேரங்களில் துணை நின்றவர் என்று தோனியைப் புகழ்ந்து டிவீட் போட்டுள்ளார் பாண்டியா. அது என்ன சிட்டு என்று தெரியவில்லை. அதையும் சிட்டுவே விளக்கினால் நல்லாருக்கும்.

Story first published: Tuesday, July 7, 2020, 15:58 [IST]
Other articles published on Jul 7, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+