Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேப்டனா 200வது ஒருநாள் போட்டி... சொதப்பலாக ஆடிய கேப்டன்

புனே : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3வது ஒருநாள் போட்டி புனேவின் எம்சிஏ மைதானத்தில் துவங்கியுள்ளது.

இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ள நிலையில் இந்த போட்டி வெற்றியை தீர்மானிக்கும் போட்டியாக அமைந்துள்ளது.

போட்டிக்கு போட்டி பல்வேறு சாதனைகளை தொடர்ந்து வரும் விராட் கோலி இந்த போட்டியிலும் முக்கியமான ஒரு சாதனையை எட்டியுள்ளார்.

3வது ஒருநாள் போட்டி

3வது ஒருநாள் போட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஒருநாள் தொடரின் 3வது போட்டி இன்றைய தினம் புனேவின் எம்சிஏ மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து தற்போது இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.

கேப்டனாக 200வது போட்டி

கேப்டனாக 200வது போட்டி

துவக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் சிறப்பான துவக்கத்தை தந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த போட்டியின்மூலம் கேப்டனாக தனது 200வது ஒருநாள் போட்டியை கேப்டன் விராட் கோலி பூர்த்தி செய்துள்ளார். இதுவரை விளையாடியுள்ள 199 போட்டிகளில் 127 ஒருநாள் போட்டிகளில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

சதத்திற்காக காத்திருப்பு

சதத்திற்காக காத்திருப்பு

மேலும் 55 போட்டிகளில் தோல்வியும் 10 போட்டிகளில் டிராவும் பெற்றுள்ளார். இதன் வெற்றி சதவிகிதம் 63.81ஆக உள்ளது. கடந்த 11 ஒருநாள் போட்டிகளில் 7 போட்டிகளில் அரைசதத்தை அடித்துள்ள விராட் கோலி தொடர்ந்து தன்னுடைய சதத்திற்காக காத்திருக்கிறார்.

சதத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு

சதத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு

சதத்திற்கு அருகில் சென்று சில ரன்கள் வித்தியாசத்தில் அவர் அதை மிஸ் செய்த போட்டிகளும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கேப்டனாக இன்றைய தனது 200வது ஒருநாள் போட்டியில் அவர் சதமடித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெறும் 7 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை அளித்தார் கோலி.

Story first published: Sunday, March 28, 2021, 20:09 [IST]
Other articles published on Mar 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+