Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்துக்கு எதிராக அரைசதம்... 25வது அரைசதத்தை எடுத்த அதிரடி மன்னன்... மிகச்சிறப்பு!

சென்னை :இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான இரண்டாவது இன்னிங்சில் ஆடி வருகிறது இந்தியா.

இதில் கேப்டன் விராட் கோலி தனது அரைசதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் அவர் அடிக்கும் 25வது அரைசதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

2வது டெஸ்ட் போட்டி

2வது டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் களமிறங்கி விளையாடிய இந்திய அணி 329 ரன்களை குவித்த நிலையில், இங்கிலாந்து அணி 134 ரன்களில் சுருண்டது. இந்நிலையில் தற்போது இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.

கோலி 25வது அரைசதம்

கோலி 25வது அரைசதம்

இதில் கேப்டன் விராட் கோலி, ஸ்பின்னர் அஸ்வினுடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினார். அவர் 60 ரன்களை அடித்துள்ளார். 134 பந்துகளில் 7 பவுண்டரிகள் இதில் அடக்கம். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் தனது 25வது அரைசதத்தை அவர் பூர்த்தி செய்துள்ளார்.

சிறப்பான பார்ட்னர்ஷிப்

சிறப்பான பார்ட்னர்ஷிப்

சென்னையின் பிட்ச் மிகவும் கடினமானதாக உள்ளதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதை தவிடு பொடியாக்கும் வகையில் விராட்டின் அரைசதம் அமைந்துள்ளது. அவருடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடிவரும் அஸ்வினும் அரைசதம் அடித்துள்ளார்.

அதிகரித்த வெற்றி சதவிகிதம்

அதிகரித்த வெற்றி சதவிகிதம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான இந்த போட்டியில் இந்தியா தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 392 ரன்கள் லீடிங்கில் உள்ளது. இந்தியாவிற்கான வெற்றி சதவிகிதம் இந்த போட்டியில் அதிகமாக காணப்படுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் அடுத்ததாக ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதிபெறும்.

Story first published: Monday, February 15, 2021, 14:07 [IST]
Other articles published on Feb 15, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+