Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் இல்லாதது மட்டுமே வெற்றி தோல்வியை தீர்மானிக்காது... சிறப்பான வீரர்கள் பலர் இருக்காங்க!

சிட்னி : கேப்டன் விராட் கோலி இல்லாதது மட்டுமே டெஸ்ட் தொடரின் வெற்றி தோல்வியை தீர்மானிக்காது என்று ஆஸ்திரேலிய துணை கேப்டன் பாட் கமின்ஸ் தெரிவித்துள்ளார்.

விராட் இல்லாத டெஸ்ட் போட்டிகள் சிறிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்திய அணியின் வெளியிலும் வாய்ப்பிற்காக திறமையான வீரர்கள் காத்திருப்பதாகவும் பாட் கமின்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

கோலி இல்லாத அணி

கோலி இல்லாத அணி

இந்திய -ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் முதல் பகலிரவு போட்டியில் மட்டும் விளையாடிவிட்டு தன்னுடைய குழந்தை பிறப்பையொட்டி இந்தியா திரும்பவுள்ளார் கேப்டன் விராட் கோலி. இதையடுத்து இந்திய அணியை ஆஸ்திரேலியா எளிதாக வெற்றி கொள்ளும் என்று பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.

வெற்றி பெற்ற இந்திய அணி

வெற்றி பெற்ற இந்திய அணி

கடந்த 2018 -19 சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா 2க்கு 1 என்ற கணக்கில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து தற்போது நடைபெறவுள்ள இந்த தொடரை கைப்பற்றும் முயற்சியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தீவிரம் காட்டி வருகின்றன.

பெரிய மாற்றம் இருக்காது

பெரிய மாற்றம் இருக்காது

இந்நிலையில், விராட் கோலி இல்லாத டெஸ்ட் தொடர் பெரிய வித்தியாசத்தை கொண்டு வராது என்று ஆஸ்திரேலிய துணை கேப்டன் பாட் கமின்ஸ் தெரிவத்துள்ளார். அது குறித்து தங்கள் அணி வீரர்கள் யோசிக்கவில்லை என்றும் அது மட்டுமே வெற்றி தோல்வியை தீர்மானிக்காது என்றும் கமின்ஸ் மேலும் கூறியுள்ளார்.

வாய்ப்புக்காக காத்திருக்கும் வீரர்கள்

வாய்ப்புக்காக காத்திருக்கும் வீரர்கள்

விராட் இல்லாத இந்திய டெஸ்ட் அணியில் சிறிய அளவில் மாற்றங்கள் இருக்கும் என்று கூறியுள்ள கமின்ஸ், ஆனால், வாய்ப்புக்காக இந்திய அணியின் வெளியிலும் திறமையான பல வீரர்கள் காத்திருப்பதாகவும் அதனால் இந்த வாய்ப்பு ஒரு வீரருக்கு சிறப்பான கேரியரை அமைத்துக் கொடுக்கலாம் என்றும் அவர் கூறினார்.

Story first published: Monday, November 16, 2020, 22:24 [IST]
Other articles published on Nov 16, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+