Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவுட்டானா இப்படியெல்லாம் செய்வீங்களா.. முதல் டெஸ்டில் விராட் கோலி செய்த விஷயம்.. ரசிகர்கள் வியப்பு!

சட்டோகிராம்: வங்கதேச அணியுடனான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி, அவுட்டான பிறகு ஆக்ரோஷத்தில் செய்த விஷயம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று சட்டோகிராமில் உள்ள மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாளின் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 278 ரன்களை குவித்துள்ளது. அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்ததால் தடுமாறிய அணியை புஜாரா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தூக்கி நிறுத்தினர்.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

ஆனால் ரசிகர்கள் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி ஒரே ரன்னுக்கு வந்த வேகத்தில் அவுட்டாகி வெளியேறினார். வங்கதேச அணியின் ஸ்பின்னர் தாய்ஜுல் இஸ்லாம் வீசிய பந்தில் எதிர்பார்க்காத விதமாக எல்.பி.டபள்யூ முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார். தான் எப்படி அவுட்டோம் என புரியாமல் குழம்பிய கோலி, டி.ஆர்.எஸ் முடிவை எடுத்தும் அது பலனளிக்காமல் போனது. இதனையடுத்து பெவிலியன் திரும்பியவுடன் தான் அவுட்டான முறையை பார்த்து அவரே அதிருப்தியடைந்துள்ளார்.

கோலி செய்த விஷயம்

கோலி செய்த விஷயம்

இந்நிலையில் அந்த அதிருப்தியின் காரணமாக விராட் கோலி செய்த விஷயம் கவனத்தை ஈர்த்துள்ளது. போட்டி நடந்துக்கொண்டிருந்த போது, அதை பார்க்காமல், நேராக சென்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். அறையில் இருந்த இடதுகை சுழற்பந்துவீச்சாளர் சௌரஃப் குமாரை தன்னுடன் வா என அழைத்துச்சென்ற அவர், முடிந்தால் அவுட்டாகி காட்டு எனக்கூறி ஆக்ரோஷமாக பேட்டிங் செய்துள்ளார்.

 என்ன காரணம்

என்ன காரணம்

விராட் கோலியை அவுட்டானது ஒரு இடதுகை ஸ்பின்னரிடம். வங்கதேச அணியில் தாய்ஜுல் இஸ்லாம் மட்டுமல்ல சகிப் அல் ஹசனும் இடதுகை ஸ்பின்னராக இருக்கிறார். எனவே 2வது இன்னிங்ஸில் அவர்களை சமாளித்து ஆட வேண்டும் என்றால் அதற்கேற்றார் போல பயிற்சி பெற வேண்டும். சௌரஃப் குமார் சமீபத்தில் தான் வங்கதேச ஏ அணியுடன் அங்கு டெஸ்ட் தொடரில் விளையாடினார். எனவே அந்த களத்தை பற்றி அவருக்கு நன்கு தெரியும் என்பதால் அவரை அழைத்துச்சென்றார்.

கோலிக்கு கட்டாயம்

கோலிக்கு கட்டாயம்

முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 278 ரன்களை சேர்த்துள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களை அடித்து சிறப்பான ஃபார்மில் ஆடி வருகிறார். 350 ரன்கள் வரை அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே 2வது இன்னிங்ஸில் இந்தியாவுக்கு அதிக ரன்கள் தேவைப்படும் என்பதால் விராட் கோலி நன்றாக ஆடியே தீர வேண்டும்.

Story first published: Wednesday, December 14, 2022, 21:19 [IST]
Other articles published on Dec 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+