Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசியகோப்பை: விராட் கோலி களமிறங்கும் இடத்தில் மாற்றம்?.. ரோகித் எடுக்கப்போகும் முக்கிய முடிவு- காரணம்

துபாய்: பாகிஸ்தான அணியுடனான போட்டியில் இந்திய வீரர் விராட் கோலியின் பேட்டிங் இடத்தை மாற்ற வாய்ப்புள்ளது.

Recommended Video

Asia Cup 2022: Virat Kohli-யின் வெறித்தனமான Net Practice

ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியாக வரும் ஆகஸ்ட் 28ம் தேதியன்று பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

இதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி துபாயில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.

ஆசிய கோப்பை தொடர்

ஆசிய கோப்பை தொடர்

இந்த தொடரில் இந்திய அணியின் செயல்பாட்டை விட, விராட் கோலி எப்படி செயல்படவுள்ளார் என்பதை தான் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துள்ளனர். நீண்ட நாள் ஓய்வில் இருந்த கோலி, தனது தவறுகளை திருத்திக்கொண்டு நேரடியாக ஆசிய கோப்பை தொடருக்கு வந்துள்ளார். மேலும் இதில் அவர் விளையாடுவதை பொறுத்துதான் டி20 உலகக்கோப்பையில் அவருக்கான வாய்ப்பு உறுதியாகும்.

கோலி இடம் மாற்றமா?

கோலி இடம் மாற்றமா?

இந்நிலையில் இந்திய அணியில் விராட் கோலியின் பேட்டிங் இடம் மாற்றப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது. விராட் கோலி வழக்கமாக 3வது இடத்தில் தான் களமிறங்குவார். ஆனால் இந்த முறை அவர் ஓப்பனிங் களமிறக்கப்படலாம். இந்திய அணியின் ஓப்பனிங்கிற்கு தற்போது கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் உள்ளனர். கே.எல்.ராகுலின் ஃபார்ம் கேள்விக்குறியாக உள்ளதால் அவர் விளையாடுவாரா என்பதே சந்தேகத்தில் உள்ளது.

ராகுல் நீக்கமா?

ராகுல் நீக்கமா?

கே.எல்.ராகுல் இல்லாத சூழலில் இந்திய அணி ரோகித், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா என நன்கு செட்டான அணியுடன் விளையாடியது. ஒருவேளை கே.எல்.ராகுல் சேர்க்கப்பட்டால் ரிஷப் பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக் யாரேனும் ஒருவரை நீக்க வேண்டியிருக்கும். இது இந்தியாவுக்கு பின்னடைவாக அமையும்.

என்ன காரணம்

என்ன காரணம்

எனவே பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளும் அணியில் கே.எல்.ராகுலை நீக்கிவிட்டால், விராட் கோலியை ஓப்பனிங் களமிறக்கலாம். இதன் மூலம் மற்ற அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும். இப்படி செய்வதன் மூலம் இந்திய அணி பெரும் ரிஸ்க்கை தவிர்க்கலாம் என்பதால் ரோகித் சர்மா சிந்தித்து வருகிறார்.

Story first published: Friday, August 26, 2022, 16:36 [IST]
Other articles published on Aug 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+