Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடின சூழலை தாண்டி சாதித்தது எப்படி??.. விராட் கோலி கூறிய நெகிழ்ச்சி பதில்.. ரசிகர்களுக்கு உத்வேகம்!

கவுகாத்தி: கடினமான காலங்கள் வந்த போதிலும், அதில் இருந்து மீண்டு சதங்களை எப்படி அடிக்கிறேன் என்பது குறித்து விராட் கோலி பேசியுள்ள வார்த்தைகள் ரசிகர்களுக்கும், இளம் வீரர்களுக்கும் நெகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கிரிக்கெட் நேற்று கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 373 ரன்களை குவித்துள்ளனர். இதன் பின்னர் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 306 ரன்களை மட்டுமே அடித்தது.

விராட் கோலி சதம்

விராட் கோலி சதம்

இந்த போட்டியில் விராட் கோலியின் இன்னிங்ஸ் இந்திய அணியை தூக்கி நிறுத்தியது என்றே கூறலாம். முதல் விக்கெட்டிற்கு 143 ரன்களுக்கு ஒரு விக்கெட் என சிறப்பான நிலையில் இருந்த அணியை தனது சதத்தால் 373 ரன்கள் வரை கொண்டு சென்றது கோலியின் சதம் தான். 87 பந்துகளை சந்தித்த அவர் 12 பவுண்டரிகள் மற்றும் ஒஉ சிக்ஸருடன் 113 ரன்களை விளாசினார்.

கோலி விளக்கம்

கோலி விளக்கம்

இந்நிலையில் தனது சதம் குறித்து விராட் கோலி பேசியது வரவேற்பை பெற்றுள்ளது. அதில், எனது ஆட்டத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. பழைய மாதிரியே தான் தற்போது ஆடுகிறேன். எனக்கென்று ஒரு திட்டம் வைத்திருக்கிறேன். அதே வழியில் தான் எப்போதுமே செயல்படுகிறேன். 25 - 30 ரன்கள் கூடுதலாக வேண்டும் என்பதை புரிந்துக்கொண்டேன். 2வது பாதியில் களத்தின் தன்மை மாறியதை புரிந்துக்கொண்டு நடுவில் அதிரடி காட்டினேன்.

ஒரு விஷயம் உறுதி

ஒரு விஷயம் உறுதி

நான் ஒரே ஒரு விஷயத்தை கற்றுக்கொண்டு, நமது ஆர்வமும் திறமையும் நம்மை விட்டு எங்குமே செல்லாது. எதை நினைத்தும் குழப்பிக்கொள்ள வேண்டாம். நேராக சென்று அச்சமின்றி விளையாடினால் போதும் எதுவும் சாத்தியமே. ஒவ்வொரு போட்டியையும் தனது கடைசி போட்டி என்பதை போல நினைத்து விளையாடுங்கள். நான் வாழ்நாள் முழுவதும் விளையாடப்போவதில்லை. எனவே இருக்கும் நேரத்தில் உற்சாகமாக விளையாடுகிறேன் என கூறியுள்ளார்.

புது சாதனை

புது சாதனை

நேற்றைய சதத்தின் மூலம் சச்சினின் சாதனைகளை கோலி முறியடித்தார். அதாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய மண்ணில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் மற்றும் கோலி தலா 20 சதங்களுடன் சமநிலையில் உள்ளனர். இந்த சாதனையை சச்சின் 164 போட்டிகளில் செய்த சூழலில், கோலி வெறும் 101 போட்டிகளிலேயே செய்துவிட்டார். இதே போல இலங்கை அணிக்கு எதிராக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் ( 8) முதலிடத்தில் இருந்த சூழலில் கோலி 9 சதத்துடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

Story first published: Wednesday, January 11, 2023, 8:43 [IST]
Other articles published on Jan 11, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+