“விரைவாக அதை செய்யதுவிடு”.. இங்கிலாந்து டெஸ்ட்.. விராட் கோலிக்கு சிறுவயது பயிற்சியாளர் எச்சரிக்கை!
எட்ஜ்பாஸ்டன்: இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்காக இந்திய வீரர் விராட் கோலிக்கு அவரின் சிறுவயது பயிற்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1ம் தேதி தொடங்கவுள்ளது.
கடந்தாண்டு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2 -1 என முன்னிலை வகிக்கும் நிலையில் 5வது போட்டியாக இது நடைபெறுகிறது.

இங்கிலாந்து டெஸ்ட்
இந்த போட்டியில் இந்திய ரசிகர்கள் அனைவரின் கவனமும் விராட் கோலி மீதுதான் உள்ளது. 2 ஆண்டுகளுக்கும் மேல் சதமடிக்காமல் இருந்த அவர், ஓய்வுக்கு பிறகு புத்துணர்ச்சியுடன் களமிறங்கவுள்ளார். எனவே அவரின் கம்பேக் நிச்சயம் இந்த டெஸ்டில் இருக்கும் என எதிர்பார்த்துள்ளனர்.

கோலிக்கு எச்சரிக்கை
இந்நிலையில் அவர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என அவரின் சிறு வயது பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ரசிகர்களுக்கு அற்புதமான போட்டி காத்துள்ளது. ஏனென்றால் விராட் கோலி - ஆண்டர்சன் சண்டை நன்றாக இருக்கும். கோலியை விக்கெட் எடுக்க துடிக்கும் ஆண்டர்சனுக்கே இந்த முறை வெற்றி வாய்ப்பு உள்ளது.

மனதளவில் பெரும் பலம்
விராட் கோலியை பல முறை விக்கெட் எடுத்துள்ளதால், ஆண்டர்சனுக்கு மனதளவில் மிகப்பெரிய பலமாகும். இது விராட் கோலிக்கு சற்று கசப்பாக இருக்கும். 2014ம் ஆண்டு கோலியை 4 முறை அவுட்டாக்கி பயமுறுத்தியுள்ளார். எனவே இங்கு மனதளவில் கோலி எந்த அளவிற்கு தைரியமாக இருக்கிறார் என்பது முக்கியம்.

பிட்ச்-ல் பிரச்சினை
ஸ்விங் ஆகாத இந்திய களங்களில் விளையாடிவிட்டு, நன்கு ஸ்விங் ஆகக்கூடிய இங்கிலாந்து களத்தை விரைவாக புரிந்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் திணற வேண்டும். விராட் கோலி போன்ற சிறந்த வீரர்கள் சவாலை ஏற்றுக்கொண்டு அசராமல் நின்று எதிர்கொண்டால் ஆண்டர்சனிடம் அவுட்டாக முடியாது. 2018ல் அதிரடி காட்டிய கோலி மீண்டும் அதே ஆட்டத்தை காட்ட வேண்டும்.


Click it and Unblock the Notifications