“கோலிக்கு அந்த எண்ணம் மட்டும் இல்லவே இல்ல” பிசிசிஐ-க்கு பாடம் எடுத்த பயிற்சியாளர்.. தெளிவான விளக்கம்
மும்பை: விராட் கோலியின் உண்மையான குணத்தை பிசிசிஐ இன்னும் புரிந்துக்கொள்ளவில்லை என சிறுவயது பயிற்சியாளர் கூறியுள்ளார்.
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கோலி நீக்கப்பட்டதில் உள்ள உண்மை தகவலை அறிய ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
சமீபத்தில் இதுகுறித்து பேசியிருந்த விராட் கோலி, பிசிசிஐ மீதும், அதன் தலைவர் கங்குலி மீதும் மறைமுக குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

என்ன தான் பிரச்சினை
டி20 கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியபோதே, வேண்டாம் என பிசிசிஐ அதிகாரிகள் கோரியதாகவும், அதனை அவர் கேட்கவில்லை என்றும் கங்குலி கூறியிருந்தார். ஆனால் அப்படி யாருமே தன்னிடம் கோரவில்லை, ஒருநாள் அணியின் கேப்டன்சியில் கூட கடைசி நேரத்தில் தான் தகவல் தெரிவிக்கப்பட்டதாக விராட் கோலி உண்மையை உடைத்தார். இதனால் யார் கூறுவது பொய்? என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

கங்குலி பதில்
இதன்பிற்கு இந்த விவகாரத்தில் பதிலளிக்கிறேன் என்று வந்த கங்குலி, மீண்டும் புது பிரச்சினையை கிளப்பினார். அதில், விராட் கோலியின் கேப்டன்சி பிரச்சினை குறித்து நான் இனியும் கருத்து கூற விரும்பவில்லை. கூறினாலும் அது சரியாக இருக்காது. இந்த விவகாரத்தை பி.சி.சி.ஐ. பார்த்து கொள்ளும், பி.சி.சி.ஐ. தக்க நேரத்தில் பதில் சொல்லும் என்று கூறினார்.

பயிற்சியாளர் பேட்டி
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா தடாலடியாக பேசியுள்ளார். அதில் அவர், இந்திய அணி தற்போது சிறப்பாக செயல்படுகிறது. இப்படிபட்ட நேரத்தில் தேவையில்லாத சர்ச்சைகள் எழும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. விராட் கோலி எதற்கும் பேராசை படமாட்டார். இரு தரப்பினரும் வலுவான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது. பிசிசிஐ சூழ்நிலையை சிறப்பாக கையாண்டு, பாதகமில்லாத முடிவினை எடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

வெளிப்படை தேவை
இப்பிரச்சினையில் கோலி - பிசிசிஐ இடையே எந்தவித ஒளிவுமறைவின்றி பேசிக்கொண்டால் எல்லாம் சரியாகிவிடும். விராட் கோலி எப்போதுமே விளையாடாமல் இருக்க வேண்டும் என்று நினைத்ததே கிடையாது. மகளின் பிறந்தநாள் வருவதால் விடுமுறை கேட்டிருப்பாரே தவிர விளையாடக்கூடாது என்று நினைத்திருக்க மாட்டார் என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications