Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“பாபர் அசாம் ட்வீட்டிற்கு ரிப்ளை செய்த விராட் கோலி..” இப்படி ஒரு நட்பா??.. ரசிகர்கள் நெகிழ்ச்சி!

லண்டன்: பாபர் அசாம் பதிவிட்ட வாழ்த்து ட்வீட்டிற்கு இந்திய வீரர் விராட் கோலி சுவாரஸ்யமான பதிலை கொடுத்துள்ளார்.

கிரிக்கெட் உலகம் முழுவதும் தற்போது விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து தான் பேசுப்பொருளாகியுள்ளது.

இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரில் சொதப்பிய அவர், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

பாபர் அசாமின் ட்வீட்

பாபர் அசாமின் ட்வீட்

விராட் கோலி மீண்டும் கம்பேக் கொடுப்பதற்காக பல்வேறு வீரர்களும் ஆறுதல் கொடுத்து வருகின்றனர். அந்தவகையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் போட்ட ட்வீட், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதில் கோலியுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு, "இதுவும் கடந்து போகும், தைரியமாக இருங்கள்" என நம்பிக்கை வார்த்தையை குறிப்பிட்டிருந்தார்.

பாபர் அசாம் விளக்கம்

பாபர் அசாம் விளக்கம்

இந்த ட்வீட் குறித்து விளக்கம் அளித்திருந்த பாபர் அசாம், ஒரு கிரிக்கெட் வீரராக ' ஃபார்ம் அவுட்' காலங்கள் குறித்து எனக்கு நன்றாக தெரியும். இதுபோன்ற சமயங்களில் ஒரு வீரருக்கு சப்போர்ட் தேவை. அதற்காக தான் நான் கோலிக்காக ஆறுதல் கூறினேன். அது அவருக்கு நம்பிக்கையை கொடுக்கும் என நினைத்தேன். அவர் உலகின் மிகச்சிறந்த வீரர்கள் ஒருவர், நிச்சயம் கம்பேக் தருவார் எனக் கூறியிருந்தார்.

விராட் கோலி பதில்

விராட் கோலி பதில்

பாபரின் இந்த பதிவிற்கு 2 நாட்கள் கழித்து விராட் கோலி பதிலளித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில் " மிகவும் நன்றி.. தொடர்ந்து முன்னேற்றத்தை மட்டுமே நீங்கள் காண வேண்டும். சிறப்பாக விளையாட வாழ்த்துக்கள் என கோலியும் நட்பு ரீதியாக வாழ்த்துக் கூறியிருக்கிறார்.

வியப்படைந்த ரசிகர்கள்

வியப்படைந்த ரசிகர்கள்

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே அரசியல் ரீதியான பிரச்சினைகளால் தனிப்பட்ட தொடர்கள் நடைபெறவில்லை. ரசிகர்களும் சண்டையிட்டுக் கொள்கின்றனர். ஆனால் இரு நாட்டு வீரர்களும் ஒருவருக்கொருவர் தோள் கொடுத்து நிற்பது ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது.

Story first published: Saturday, July 16, 2022, 18:05 [IST]
Other articles published on Jul 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+