Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“கங்குலி சொல்வது பொய்?”.. கோலியின் விவகாரத்தில் திடீர் திருப்பம்.. சிறுவயது பயிற்சியாளர் பகீர் தகவல்

மும்பை: விராட் கோலியின் விவகாரத்தில் பிசிசிஐ அநீதி செய்திருப்பதாக கோலியின் இளம் வயது பயிற்சியாளர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்தியாவின் 50 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டன்சி பதவியில் இருந்து விராட் கோலி அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு மாற்றாக ரோகித் சர்மா முழு நேர கேப்டனாக நியமிக்கப்பாட்டுள்ளார்.

ஒருநாள் அணிக்கு தொடர்ந்து கேப்டனாக செயல்படவே விராட் கோலி நினைத்துள்ளார். ஆனால் அவரின் விருப்பத்திற்கு மாறாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

விராட் கோலி அதிருப்தி

விராட் கோலி அதிருப்தி

இதனையடுத்து விராட் கோலி கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடர் தான் முதலில் நடைபெறவுள்ளது. ஆனால் அதற்கான பபுளில் கூட விராட் கோலி இன்னும் நுழையவில்லை. அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை என்பது போல தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

 பகிரங்க குற்றச்சாட்டு

பகிரங்க குற்றச்சாட்டு

இந்நிலையில் பிசிசிஐ மீது விராட் கோலியின் சிறு வயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதில், விராட் கோலியின் மொபைல் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. அவருடன் தற்போது வரை நான் பேசவில்லை. டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன் என்று கோலி கூறிய போதே ஒருநாள் அணியின் கேப்டன்சியில் இருந்து வெளியேறுங்கள் என பிசிசிஐ கோரியிருக்க வேண்டும். அல்லது பதவியே விலகாமல் தடுத்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் தற்போது இந்த பிரச்னை வந்திருக்காது.

மாறுபட்ட கருத்து

மாறுபட்ட கருத்து

நான் கங்குலியின் விளக்கத்தை கேட்டேன். அதில் அவர் கோலியை டி20 அணியின் கேப்டன்சியில் இருந்து விலக வேண்டாம் என வலியுறுத்தியதாக கூறினார். ஆனால் அது குறித்து எனக்கு எந்தவித தகவலுமே வரவில்லையே. அவரின் இந்த பதில் எனக்கு ஆச்சரியம் கொடுக்கிறது. இதுகுறித்து பல்வேறு விளக்கங்கள் உலா வருகின்றன.

ஆச்சரியம்

ஆச்சரியம்

ஆனால் கேப்டன்சி மாற்றம் விவகாரத்தில் இதுவரை தேர்வுக்குழு அதிகாரிகள் எந்தவித விளக்கத்தையும் கொடுக்கவில்லை. பிசிசிஐ-க்கு என்ன தான் வேண்டும் என்று தெரியவில்லை. எனவே இதில் வெளிப்படையான கருத்துகளை இந்திய அணி நிர்வாகம் வெளியிட வேண்டும். கோலி போன்ற சிறந்த கேப்டனை நீக்கியது ஆச்சரியமளிக்கிறது.

Story first published: Monday, December 13, 2021, 20:14 [IST]
Other articles published on Dec 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+