Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் முறையாக வெளியான “வாமிகா” புகைப்படம்.. கொண்டாட்டத்தில் குதித்த விராட் கோலி.. ரசிகர்கள் குஷி!

கேப்டவுன்: விராட் கோலியின் மகள் வாமிகாவின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது. அதுவும் கோலியின் அட்டகாசமான ஆட்டத்தின் போது காட்டப்பட்டதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இரு அணிகளும் மோதி வரும் 3வது ஒருநாள் போட்டி கேப்டவுன் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி, 3வது போட்டியில் சிறப்பாக விளையாடியது.

 3வது போட்டி

3வது போட்டி

இந்த போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 287 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனையடுத்து 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் சற்று தடுமாற்றத்தை சந்தித்தது. கேப்டன் கே.எல்.ராகுல் 9 ரன்களுக்கு வெளியேறிய நிலையில் மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான் 61 ரன்களை அடித்து அவுட்டானார்.

கோலி அரைசதம்

கோலி அரைசதம்

இந்திய அணியை தூக்கி நிறுத்த சீனியர் வீரர் தேவை என்ற சூழல் இருந்த போது விராட் கோலி சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசினார். 84 பந்துகளை சந்தித்த அவர் 5 பவுண்டர்களுடன் 65 ரன்களை குவித்தார். இந்த அரைசதத்திற்கு பின்னர் கோலி திடீரென பேட்டை குழந்தையை போல் தாளாட்டி கொண்டாடியது அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.

வாமிகா புகைப்படம்

வாமிகா புகைப்படம்

இதற்கான காரணம் விராட்டிற்காக அவரின் மகள் வாமிகா கொண்டாடியது தான். மைதானத்தில் இருந்த விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா, மகள் வாமிகா ஆட்டத்தை பார்க்கும்படி கையில் வைத்திருந்தார். தனது தந்தை அரைசதமடித்ததும் குஷியாக கைத்தட்டி கொண்டாடினார். இதனை நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரபரப்பு செய்தனர்.

ஆத்திரத்தில் ரசிகர்கள்

ஆத்திரத்தில் ரசிகர்கள்

விராட் கோலி - அனுஷ்கா தம்பதியினர், தங்களது மகள் வாமிகாவின் புகைப்படத்தை இன்னும் வெளியுலகிற்கு காட்டவில்லை. யாரும் வாமிகாவை புகைப்படம் எடுக்காதீர்கள் என இத்தனை நாட்களாக பாதுகாத்து வந்தனர். ஆனால் இன்று நேரடி ஒளிபரபரப்பில் வெளிவந்துள்ளது. இதனால் கோபமடைந்த கோலி ரசிகர்கள் சிலர், தென்னாப்பிரிக்காவின் ஒளிபரபரப்பு நிறுவனமான சூப்பர் ஸ்போர்ட்ஸை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Story first published: Tuesday, January 25, 2022, 9:41 [IST]
Other articles published on Jan 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+