Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உடலெங்கும் கோலி குறித்த 16 டாட்டூஸ் - கோலி ரசிகரின் வெறித்தனம்

Recommended Video

Kohli's dedicated fan who have 16 tattoos in his figure

கட்டாக் : ஒடிசாவை சேர்ந்த கோலி ரசிகர் பின்டூ பெஹேரா, தனது உடலெங்கிலும் கோலி குறித்த 16 டாட்டூக்களை குத்திக் கொண்டு, காண்பவர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

கோலியின் தீவிர ரசிகரான பின்டூ, தான் சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் ரசிகராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கோலி விளையாடும் ஸ்டைல் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கோலி விளையாடும் அனைத்து போட்டிகளையும் தான் தவறவிட்டதில்லை என்று கூறும் பின்டூ, காசில்லாத காரணத்தால், வெளிநாடுகளில் அவர் விளையாடும் போட்டியை காணும் சந்தர்ப்பம் தனக்கு கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

கோலியின் தீவிர ரசிகர்

கோலியின் தீவிர ரசிகர்

இந்தியா -மேற்கிந்திய தீவுகளின் 3வது ஒருநாள் சர்வதேச போட்டி கட்டாக்கில் துவங்கியுள்ள நிலையில், கோலி ரசிகர் ஒருவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

கோலியின் முகம், ஜெர்சி எண்

கோலியின் முகம், ஜெர்சி எண்

கோலியின் தீவிர ரசிகரான ஒடிசாவை சேர்ந்த பின்டூ, தன்னுடைய உடலெங்கிலும் கோலி சம்பந்தப்பட்ட 16 டாட்டூக்களை குத்தியுள்ளார். கோலியின் முகம், அவரது ஜெர்சி எண்ணான 18 உள்ளிட்டவற்றை தன்னுடைய உடலெங்கிலும் டாட்டூ குத்தியுள்ளார்.

"விளையாடும் ஸ்டைல் பிடிக்கும்"

தான் சிறுவயது முதலே கிரிக்கெட் ரசிகரான உள்ளதாக பின்டூ குறிப்பிட்டுள்ளார். மேலும் கோலியின் தீவிர ரசிகராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் பின்டூ, கோலி விளையாடும் ஸ்டைல் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.

உடலெங்கிலும் டாட்டூக்கள்

உடலெங்கிலும் டாட்டூக்கள்

விராட் கோலியின் விளையாட்டிற்கு மதிப்பளிக்கும் வகையில் தான் தன்னுடைய உடலெங்கிலும் 16 டாட்டூக்களை குத்தியுள்ளதாக கூறியுள்ள பின்டூ, இதற்கென தன்னிடம் காசில்லாத நிலையில், காசை சேர்த்து சேர்த்து தான் இதை சாத்தியப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்திய போட்டிகளை கண்டுகளிப்பு

இந்திய போட்டிகளை கண்டுகளிப்பு

கோலியின் ஜெர்சி நம்பர் 18 உள்ளிட்ட 16 டாட்டூக்களை தனது உடலில் குத்திக் கொள்ள தனக்கு இதுவரை 1 லட்சம் ரூபாய் வரை செலவானதாகவும் பின்டூ தெரிவித்துள்ளார். மேலும் கோலி பங்கேற்கும் அனைத்து உள்ளூர் போட்டிகளையும் தான் கண்டுகளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"உடனடியாக ஓகே சொல்வேன்"

வெளிநாட்டில் கோலியின் ஆட்டத்தை காணும் சந்தர்ப்பம் தனக்கு வாய்க்கவில்லை என்று வருத்தம் தெரிவிக்கும் பின்டூ, அதற்கு சந்தர்ப்பம் கிடைத்தால் தான் கண்டிப்பாக செல்வேன் என்றும் கூறியுள்ளார்.

மகிழ்ச்சி தெரிவிக்கும் பின்டூ

கடந்த அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியின்போது

கோலியை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாக பின்டூ தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தன்னை கோலி கட்டியணைத்த நிகழ்வை மறக்க முடியாது என்றும் மகிழ்ச்சி தெரிவித்தார். இதற்கென தான் கடந்த 2016 முதல் காத்திருந்ததாகவும் அவர் கூறினார்.

Story first published: Sunday, December 22, 2019, 15:27 [IST]
Other articles published on Dec 22, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+