Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடேங்கப்பா.. கோடிகளை குவித்து விராட் கோலி வாங்கிய புதிய பங்களா.. அட்டகாச வசதிகள்.. முழு விவரம் இதோ

மும்பை: பரபரப்பு கிரிக்கெட் போட்டிகளுக்கு இடையேயும் இந்திய வீரர் விராட் கோலி வாங்கியுள்ள புதிய சொகுசு பங்களா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பங்களாவில் பல சுவாரஸ்ய விஷயங்கள் அடங்கியுள்ளன.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்துள்ள முதல் 2 போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளது.

எனவே மீதமுள்ள 2 போட்டிகளையும் கைப்பற்றி தொடரை வெல்ல முணைப்பு காட்டி வருகின்றனர். இந்த பணியில் தான் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி மும்முரம் காட்டி வருகிறார்.

சொகுசு பங்களா

சொகுசு பங்களா

இந்நிலையில் பயிற்சிகளுக்கு இடையே விராட் கோலி புதிய சொகுசு பங்களா ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆலிபாக் நகரத்தில் தான் இந்த பங்களா அமைந்துள்ளது. இதன் சுவாரஸ்ய விஷயம் என்னவென்றால் ஆலிபாக் என்பது கடற்கரையை ஒட்டியுள்ள ஒரு நகரமாகும். ஓய்வு நாட்களில் நேரத்தை கழிப்பதற்கு அற்புதமான இடமாக இது அமையும்.

அப்படி என்ன ஸ்பெஷல்

அப்படி என்ன ஸ்பெஷல்

சுமார் 2000 சதுர அடி அளவில் அமைந்துள்ள அந்த சொகுசு பங்களாவில் இருந்து கடற்கரை தெளிவாக தெரியும். 2000 சதுரடியில் 400 சதுரடி அளவில் நீச்சல் குளம் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதியில் ஓய்வறைகள், ஆலோசனைக்கூடங்கள், விளையாட்டுப்பகுதி என பல்வேறு சிறப்பம்சங்கள் அமைந்துள்ளன. இந்த பங்களாவை ரூ.6 கோடி கொடுத்து கோலி வாங்கியுள்ளார். இதற்கான பத்திரபதிவு செலவு மட்டுமே ரூ.36 லட்சம் ஆகும்.

இண்டீரியர் டிசைன்கள்

இண்டீரியர் டிசைன்கள்

பாலிவுட் நட்சத்திரம் ஹிர்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சூசன்னே கான் தான் இந்த பங்களாவிற்கு இண்டீரியர் டிசைன்களை செய்துள்ளார். இதுகுறித்த வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரசிகர்கள் வியந்து பார்க்கும் அளவிற்கு ஏற்பாடுகள் படு சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. விராட் கோலி அடிக்கடி குடும்பத்துடன் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது உண்டு. அதற்கு இது ஏற்ற இடமாகும்.

பண்ணை இல்லம்

பண்ணை இல்லம்

விராட் கோலி - அனுஷ்கா சர்மா ஜோடி ஆலிபாக் நகரத்தில் வாங்கும் முதல் சொத்து இதுவல்ல. இதற்கு முன்னர் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஆலிபாக்கில் உள்ள பண்ணை வீடு ஒன்றை வாங்கினர். ரூ.19.24 கோடி மதிப்பு கொண்ட அந்த பண்ணை வீட்டை வாங்க பத்திர பதிவு செலவிற்கு மட்டுமே ரூ.1.15 கோடியை செலவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, February 24, 2023, 19:04 [IST]
Other articles published on Feb 24, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+