Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோஹ்லியின் தொடர் சொதப்பலுக்கு காரணம் காதலா?, மோதலா?.. தவிப்பில் இந்திய அணி!

டாக்கா: இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேனாக பார்க்கப்படும் விராட் கோஹ்லி தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் முக்கிய கட்டங்களில் இந்திய அணியின் வெற்றி எதிரணிகளால் பறிக்கப்படுவது தொடர் கதையாகிவருகிறது. உலக கோப்பையாக இருந்தாலும் சரி, வங்கதேசத்துடனான ஆட்டமாக இருந்தாலும் சரி விராட் கோஹ்லி ஆட்டம் இந்திய ரசிகர்களுக்கு எரிச்சலூட்டுவதாக உள்ளது.

அபார தொடக்கம்

அபார தொடக்கம்

2008ம் ஆண்டு இந்திய ஒருநாள் அணிக்குள் காலடி எடுத்து வைத்தது முதல் விராட் கோஹ்லி உயரத்தை நோக்கிதான் பயணித்துள்ளார். 2011 முதல் இதுவரை வருடந்தோறும், ஆயிரம் ரன்களுக்கும் குறையாமல் (2010ல் 995 ரன்கள்) எடுத்து வந்துள்ளார். 2009 முதல் பேட்டிங் சராசரி 47 ரன்களுக்கும் குறையாமலே இருந்து வந்துள்ளது. ஸ்டிரைக் ரேட்டும் 84-ஐ குறைந்ததில்லை. இப்படி ராஜபாதையில் போய் கொண்டிருந்த கோஹ்லிக்கு, 2015 சறுக்கல் பாதையாகிவிட்டது.

நடப்பாண்டில் சொதப்பல்

நடப்பாண்டில் சொதப்பல்

உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அடிக்கப்பட்ட 107 ரன்களை தவிர்த்து பார்த்தால், இந்த வருடத்தில், விராட் கோஹ்லி 50 ரன்னை கூட எந்த போட்டியிலும் தாண்டவில்லை. ரோகித் ஷர்மா, தவான், சுரேஷ் ரெய்னா போன்ற பேட்ஸ்மேன்கள் தக்க நேரத்தில் கை கொடுத்ததாலும், பவுலர்கள் திறமையாலும், இந்தியா உலக கோப்பை அரையிறுதி வரை முன்னேறியது. உலக கோப்பையின் முக்கிய அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜான்சன் பந்தில் மோசமான ஒரு ஃபுல் ஷாட் அடித்து கோஹ்லி வெளியேறினார். 2003 உலக கோப்பை இறுதி போட்டியில் சச்சின், மெக்ராத் பந்தில் அவுட் ஆகி ஏமாற்றியதற்கு சற்றும் இளைத்ததில்லை இந்த ஷாட்.

மோசமான ஷாட்

மோசமான ஷாட்

நேற்று வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும், முக்கியமான நேரத்தில் இறங்கிய கோஹ்லி, மிக மோசமான ஒரு ஷாட்டை அடித்து அவுட் ஆனார். ஆப் ஸ்டம்புக்கு வெளியே அகன்று சென்ற பந்தை மெத்தனமாக அடித்து விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார். 16 ஓவர்களில் 95 ரன்களுக்குதான் முதல் விக்கெட்டை இழந்த இந்தியா வலுவாகவே இருந்தது.

கோஹ்லியால் கோல்மால்

கோஹ்லியால் கோல்மால்

ஆனால் ஒன்டவுன் பேட்ஸ்மேனான கோஹ்லி 1 ரன்னில் அவுட் ஆக, பிற வீரர்களும் வால்பிடித்து நடந்தனர். கோஹ்லி அவுட்டுக்கு பிறகுதான் ஆட்டம் முழுமையாக வங்கதேச வசம் சென்றது. ஒன்டவுன் வரிசை என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பொஷிஷன். தொடக்க விக்கெட் விரைந்து விழுந்திருந்தால் தாங்கி பிடித்து செல்வதும், ஓப்பனிங் வலுவாக அமைந்திருந்தால், அதையே கன்டினியூ செய்வதும் அடுத்து வரும் பேட்ஸ்மேனில் முக்கிய பணி. ஆனால், அந்த பணியில் கோஹ்லி தொடர்ந்து சொதப்புகிறார்.

கோஹ்லி சாதனை

கோஹ்லி சாதனை

2009ம் ஆண்டு கோஹ்லி 10 போட்டிகளில் ஆடி 325 ரன்கள் குவித்தார். பேட்டிங் சராசரி 54.16. 2010ல், 25 போட்டிகளில் ஆடிய கோஹ்லி 995 ரன்கள் குவித்தார். பேட்டிங் சராசரி 47.38. 2011ல் 34 போட்டிகளில், ஆடிய கோஹ்லி 1381 ரன்கள் குவித்து 47.62 என்ற பேட்டிங் சராசரி வைத்திருந்தார். 2012ல் 17 போட்டிகளில் ஆடிய கோஹ்லி அதிரடியாக 1026 ரன்கள் குவித்து 68.4 பேட்டிங் சராசரி வைத்திரு்தார்.

வீழ்ச்சி

வீழ்ச்சி

2013ல் 34 போட்டிகளில் 1268 ரன்களை குவித்து 52.83 சராசரியும், 2014ல் 21 போட்டிகளில் 1054 ரன்கள் குவித்து 58.55 சராசரியும் குவித்திருந்த கோஹ்லி, நடப்பாண்டில் இதுவரை 13 போட்டிகளின் மூலம் 330 ரன்களை அடித்து வெறும் 33 என்ற சராசரியை வைத்து்ள்ளார். எப்போதுமே 85-ஐ ஒட்டியும் அதற்கு மேலுமாக இருந்த ஸ்டிரைக் ரேட்டும், தற்போது 76.74ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

மோதலா, காதலா

மோதலா, காதலா

உலக கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு தொடரில் இருந்துதான் கோஹ்லி சொதப்பல் ஆரம்பித்தது. அப்போதுதான் கேப்டன் டோணியுடன் அவருக்கு மோதல், அனுஷ்காவுடன் காதல் என சர்ச்சைகளும் கூடின. டோணியும் திடீரென டெஸ்ட் கேப்டன் பதவியை துறந்தார். உலக கோப்பையிலும், டோணியை கோப்பையை வாங்க விடக்கூடாது என்று கோஹ்லி செயல்பட்டதாகவே சில கிசுகிசுக்கள் வந்தன. இப்போதும் கோஹ்லி சொதப்புவதை பார்த்தால் ரசிகர்களுக்கு பல சந்தேகங்கள் வரத்தான் செய்கின்றது.

Story first published: Friday, June 19, 2015, 14:03 [IST]
Other articles published on Jun 19, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+