ஓமைகாட்: கோஹ்லி போன்றே அச்சு அசலாக இருக்கும் பாக். வாலிபர்
ஓமைகாட்: கோஹ்லி போன்றே அச்சு அசலாக இருக்கும் பாக். வாலிபர்
சென்னை: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி போன்றே அச்சு அசலாக இருக்கும் பாகிஸ்தானிய வாலிபரின் புகைப்படத்தால் ட்விட்டர் பரபரக்கிறது.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி இந்திய கிரிக்கெட் வீரர்களில் முக்கியமானவராக உள்ளார். இந்நிலையில் ட்விட்டரில் மக்கள் கோஹ்லியை பற்றி தான் பேசுகிறார்கள். ஆனால் விராட் கோஹ்லியை பற்றி அல்ல. பார்க்க அச்சு அசலாக அவரைப் போன்றே இருக்கும் மற்றொரு வாலிபரைப் பற்றி தான் ட்விட்டரில் மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
பாகிஸ்தானில் வசிக்கும் அந்த வாலிபர் கோஹ்லியின் இரட்டை சகோதரர் போன்று உள்ளார். அந்த வாலிபருக்கு டிவி தொடர்கள் மற்றும் விளம்பரப் படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வருவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து கிரிக்கிங்இப் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
இவர் பார்க்க யார் மாதிரி இருக்கிறார்? #Dopplegänger என்று தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அகமது ஷாஷாத்தும் பார்க்க கோஹ்லி போன்று தான் உள்ளார் என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications