மூன்று நாட்கள்... மூன்று இரவுகள்... விராட் கோலியின் வித்தியாச ஓவியம்
கவுஹாத்தி : இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியின் ரசிகர் ஒருவர் அவரது ஓவியத்தை புதுமையான முறையில் செல்போன்களை கொண்டு உருவாக்கியுள்ளது காண்பவர்களை கவரும்வகையில் உள்ளது.
கவுஹாத்தியை சேர்ந்த அந்த ரசிகரின் புதுமையான இந்த முயற்சியை நேரில் சந்தித்து பாராட்டிய விராட் கோலி அந்த ஓவியத்தில் தன்னுடைய கையெழுத்தையும் போட்டுள்ளார்.
இந்த ஓவியத்தை உருவாக்க தனக்கு 3 நாட்கள் மற்றும் 3 இரவுகள் ஆனதாக அந்த ரசிகர் தெரிவித்துள்ளார்.

உலகெங்கிலும் ரசிகர்கள்
இந்தியாவின் பெருமைக்குரிய கேப்டன் விராட் கோலி பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக உள்ளார். அவரது பல முயற்சிகள் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் பாராட்டுகளுக்கு உள்ளாகி வருகிறது.

இலங்கைக்கு எதிரான போட்டி
இலங்கைக்கு எதிராக கவுஹாத்தியில் இன்று துவங்கவுள்ள சர்வதேச டி20 தொடரின் முதல் போட்டியில் கேப்டன் விராட் கோலி தலைமையில் இந்திய அணியினர் மோதவுள்ளனர்.

செல்போன்களால் கோலி ஓவியம்
இந்நிலையில் கவுஹாத்தியை சேர்ந்த விராட் கோலியின் ரசிகர் ஒருவர், அவரது ஓவியத்தை வித்தியாசமான முறையில் பழைய செல்போன்களை கொண்டு உருவாக்கியுள்ளார்.

கோலி நேரில் பாராட்டு
ராகுல் என்ற அந்த ரசிகரின் இந்த வித்தியாசமான முயற்சியை நேரில் பார்த்து மகிழ்ச்சியடைந்த விராட் கோலி, அது மிகச்சிறந்த படைப்பு என பாராட்டியதுடன், தன்னுடைய கையெழுத்தையும் அதில் பதிவு செய்தார்.
டிவிட்டர் தளத்தில் பதிவு
இதனிடையே, ரசிகர் மற்றும் கேப்டன் விராட் கோலியின் இந்த சந்திப்பின் வீடியோவை தன்னுடைய டிவிட்டர் தளத்தில் பிசிசிஐ பதிவு செய்துள்ளது.

ரசிகரின் விடாமுயற்சி
பழைய செல்போன்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஓவியத்தை உருவாக்க தனக்கு 3 நாட்கள் மற்றும் 3 இரவுகள் ஆனதாக கவுஹாத்தியை சேர்ந்த அந்த ரசிகர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications