Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மௌனம் கலைத்த விராட் கோலி.. சேத்தன் சர்மாவின் சர்ச்சை வீடியோ.. ஒரே வரியால் ரசிகர்கள் நெகிழ்ச்சி!

மும்பை: இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா கூறியுள்ள தகவல்களால் பெரும் சர்ச்சைகள் கிளம்பியுள்ள சூழலில், நட்சத்திர வீரர் விராட் கோலி போட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தனியார் செய்தி தொலைக்காட்சி சேத்தன் சர்மாவுக்கு எதிராக ஸ்டிங் ஆப்ரேஷன் ஒன்றை நடத்தியுள்ளது. ரகசிய கேமிரா மூலம் அவரிடம் நடத்தப்பட்ட நேர்க்காணலில் இந்திய கிரிக்கெட்டில் மறைந்துள்ள பல்வேறு ரகசியங்களை உடைத்துள்ளார்.

குறிப்பாக முன்னாள் கேப்டன் விராட் கோலி நடந்த அநீதிகள் குறித்து அவர் கூறியது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. கேப்டன்சி விஷயத்தில் கங்குலி மற்றும் விராட் கோலி இடையே நடந்த பிரச்சினைகளை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.

கேப்டன்சி பிரச்சினை

கேப்டன்சி பிரச்சினை

விராட் கோலியை கேப்டன்சியில் இருந்து யாரும் நீக்கவில்லை, அவரே தான் விருப்பப்பட்டு பதவி விலகினார் என அப்போதைய தலைவர் கங்குலி கூறியிருந்தார். ஆனால் தனக்கு ஆதரவாக யாருமே நிற்கவில்லை, கங்குலி என்னிடம் எதையுமே பேசவில்லை என கோலி குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தில் யார் கூறுவது உண்மை என புரியாமல் கிட்டத்தட்ட ஓராண்டு காலம் ஓடிவிட்டது.

சேத்தன் சர்மாவின் தகவல்

சேத்தன் சர்மாவின் தகவல்

ஆனால் அதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. இதுகுறித்து பேசிய சேத்தன், சவுரவ் கங்குலிக்கு விராட் கோலி என்றால் பிடிக்கவே பிடிக்காது. ஆலோசனை கூட்டத்தின் போது கோலி கூறிய கருத்தை ஒருமுறை கங்குலி விமர்சித்தார். அப்போது இருந்து இந்த பிரச்சினை தீர்க்கப்படாமலேயே இருந்தது. இதனால் இருவரும் சண்டையிட்டுக்கொண்டனர். உண்மையை சொல்லப்போனால் கேப்டன்சி விவகாரத்தில் ரோகித்திற்கு ஆதரவாக பிசிசிஐ செயல்படவில்லை. விராட் கோலி எதிராக நாங்கள் செயல்பட்டோம் எனக்கூறலாம். மோசமான ஃபார்மை பயன்படுத்தி அவரை நீக்கிவிட்டோம் எனக்கூறியுள்ளார்.

கோலிக்கு கொடுமை

கோலிக்கு கொடுமை

ஒரு வீரருக்கு எதிராக ஒட்டுமொத்த கிரிக்கெட் வாரியமே செயல்பட்டிருப்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. எனினும் விராட் கோலி பத்திரிகைகளில் உண்மையை கூறாமல், பெருந்தன்மையாக நான் பதவி விலகினேன் தான். ஆனால் என்னை யாரும் மறுபரிசீலனை செய்ய சொல்லவில்லை என மறைமுகமாக வருத்தத்தை பதிவு செய்திருந்தார்.

கோலியின் ரியாக்‌ஷன்

கோலியின் ரியாக்‌ஷன்

இந்நிலையில் இந்த பிரச்சினைகள் குறித்து விராட் கோலி பதிவு ஒன்றை போட்டுள்ளார். காரில் இருப்பது போன்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் போட்டுள்ள கோலி, நீண்ட நாட்களுக்கு பிறகு டெல்லி மைதானத்திற்கு செல்கிறேன். 'Nostalgic' உணர்வாக இருக்கிறது எனக்குறிப்பிட்டுள்ளார். அந்த ஒரு ஆங்கில வார்த்தையின் மூலம் ஒட்டுமொத்த சர்ச்சைக்கும் அவர் பதில் கூறியுள்ளார்.

 என்ன அர்த்தம்?

என்ன அர்த்தம்?

அதாவது Nostalgic என்ற வார்த்தைக்கு அர்த்தம், கடந்த காலங்களில் நடந்த நல்லது அல்லது கொடுமையான விஷயங்களை தற்போது நினைத்து பார்த்து நெகிழ்ச்சி அடைவது ஆகும். அந்தவகையில் விராட் கோலியும் தனக்கு நடந்த கொடுமைகளுக்கு தற்போது நியாயம் கிடைத்துவிட்டது போன்ற உணர்வு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Wednesday, February 15, 2023, 15:19 [IST]
Other articles published on Feb 15, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+