தோற்றாலும், ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்தோம்ல, அதைப் பாருங்க.... கோஹ்லி பெருமிதம்
சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தாலும், சரியான போட்டியை கொடுத்ததாக பெருமிதம் வெளிப்படுத்தியுள்ளார் டெஸ்ட் அணிக்கான கேப்டன் விராட் கோஹ்லி.

இதுகுறித்து கோஹ்லி கூறியதாவது: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்து முடிந்த நான்கு டெஸ்ட் போட்டிகளிலுமே, இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆஸ்திரேலியாவுக்கு தக்கபதிலடி கொடுக்க தவறவில்லை. ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிராக விளையாடியபோதிலும், இந்திய அணி நிலை தடுமாறவில்லை.
ஆட்டத்தின் ஒரு சில பகுதியின்போது செய்த தவறுகள்தான் வெற்றியை நமக்கு பெற்றுத்தராமல் விட்டுவிட்டது. 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிபெற வாய்ப்பு இருந்தது. ஆனால் ஆஸ்திரேலியா பலமாக எதிர்த்தது. எனவே ஆட்டம் டிராவில் முடிந்தது. இவ்வாறு கோஹ்லி கூறினார்.
Story first published: Monday, January 12, 2015, 12:51 [IST]
Other articles published on Jan 12, 2015


Click it and Unblock the Notifications