Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆர்சிபி புதிய கேப்டன் அறிவிப்பு.. விராட் கோலியின் அல்டிமேட் ரியாக்‌ஷன்.. வெளியான வீடியோ!

பெங்களூரு: ஆர்சிபி புதிய கேப்டன் அறிவிப்பு குறித்து விராட் கோலி புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

விராட் கோலி பதவி விலகியதில் இருந்து ரயால் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் யார் என்ற குழப்பம் நீண்ட நாட்களாக நீடித்து வந்தது.

தினேஷ் கார்த்திக், டூப்ளசிஸ், மேக்ஸ்வெல் என 3 பேர் கேப்டன் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டு ஆலோசிக்கப்பட்டது.

ஆர்சிபி கேப்டன்

ஆர்சிபி கேப்டன்

குறிப்பாக விராட் கோலி கூட மீண்டும் கேப்டன் பதவியை ஏற்கலாம் என தகவல்கள் வெளியாகின. அவருக்காக தான் ரசிகர்களும் காத்திருந்தனர். இந்நிலையில் தென்னாப்பிரிக்க வீரர் பாஃப் டூப்ளசிஸ் தான் ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விராட் கோலி ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.

கோலி ரியாக்‌ஷன்

கோலி ரியாக்‌ஷன்

இந்நிலையில் இதுகுறித்து விராட் கோலி வீடியோவில் பேசியுள்ளார். அதில், புத்துணர்ச்சியுடன் கூடிய ஆர்சிபி அணியாக ஆர்சிபி களமிறங்கவுள்ளது. இதனை எதிர்நோக்கியுள்ளேன். சுவாரஸ்ய விஷயமாக டூப்ளசிஸ் இனி ஆர்சிபி அணியை வழிநடத்தப்போகிறார். இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனது கடமையை எனக்கு மிகவும் நெருங்கிய நண்பரான டூப்ளசிஸுடம் கொடுப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

 நெருங்கிய நண்பர்கள்

நெருங்கிய நண்பர்கள்

கிரிக்கெட்டில் எனக்கு மிக குறைந்த அளவிலான நண்பர்கள் தான் உள்ளனர். அதில் டூப்ளசிஸும் ஒருவர். கடந்த சில வருடங்களாக ஒருவருக்கு ஒருவர் நன்கு அறிந்துக் கொண்டோம். அவருக்கு கீழ் விளையாடுவது சிறப்பாக இருக்கும். இனி வரும் நாட்களில் நானும் டூப்ளசிஸும் அமைக்கப்போகும் பார்ட்னர்ஷிப் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். இதே போல மேக்ஸ்வெல் மற்றும் பல சிறந்த வீரர்களும் உள்ளனர்.

 சமமான படை

சமமான படை

இந்தாண்டு ஆர்சிபி நிர்வாகம் ஒரு சமமான படையை உருவாக்கி கொடுத்துள்ளது. இதனை வைத்து கோப்பையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. எப்போது ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என காத்துக் கொண்டுள்ளேன். உங்களை விரைவில் சந்திக்கிறேன் என கோலி பேசியுள்ளார்.

அனுபவம் என்ன

அனுபவம் என்ன

விராட் கோலியை போன்ற கேப்டன்சியில் சிறந்த அனுபவம் உள்ளவர் டூப்ளசிஸ். தென்னாப்பிரிக்க அணியை சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான முறையில் வழிநடத்தியுள்ளார். இதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரிலும் நல்ல அனுபவம் மற்றும் தோனியுடன் பழகிய அனுபவங்கள் உள்ளன.

Story first published: Saturday, March 12, 2022, 21:39 [IST]
Other articles published on Mar 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+