Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆரோன் ஃபிஞ்ச்-ன் ஓய்வு அறிவிப்பு.. விராட் கோலி போட்ட இன்ஸ்டா பதிவு.. ரசிகர்கள் பாராட்டு!

சிட்னி: ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் ஃபிஞ்ச் ஓய்வு பெற்றது குறித்து விராட் கோலி பதிவிட்ட கருத்து ரசிகர்களிடம் பாரட்டப்பட்டு வருகிறது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறவுள்ளது.

இதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் 15 பேர் கொண்ட அணியை சமீபத்தில் அறிவித்திருந்தது.

ஆரோன் ஃபிஞ்ச் ஓய்வு

ஆரோன் ஃபிஞ்ச் ஓய்வு

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் வெள்ளைப்பந்து அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முற்றிலும் விலகுவதாக முடிவெடுத்துள்ளார். இவரின் தலைமையில் ஆஸ்திரேலிய அணி வெற்றிகளை குவித்த போதும், ஃபிஞ்ச்-ஆல் பெரியளவில் ரன்களை குவிக்க முடியவில்லை. இதன் காரணமாக ஓய்வு முடிவை கையில் எடுத்துள்ளார்.

கடைசி போட்டி

கடைசி போட்டி

அந்தவகையில் முதலில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதுவே ஃபிஞ்சின் கடைசி ஒருநாள் கிரிக்கெட்டாக பார்க்கப்படுகிறது. டி20 உலகக்கோப்பை முடிந்தவுடன் 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்தும் விலகவுள்ளதாக தெரிகிறது.

கோலி வாழ்த்து

கோலி வாழ்த்து

இந்நிலையில் ஃபிஞ்ச்-க்கு இந்திய வீரர் விராட் கோலி வாழ்த்து கூறியுள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், " சிறப்பான முடிவை எடுத்துள்ளீர்கள் ஃபிஞ்ச். உங்களுக்கு எதிராக இத்தனை ஆண்டுகள் விளையாடியதை பெருமையாக நினைக்கிறேன். ஆர்சியில் உங்களுடன் சேர்ந்து விளையாடியது மகிழ்ச்சி. வாழ்கையின் அடுத்த கட்டத்தை மிகவும் சிறப்பாக வழிநடத்த வாழ்த்துக்கள் என கோலி கூறியுள்ளார்.

கிரிக்கெட் பயணங்கள்

கிரிக்கெட் பயணங்கள்

35 வயதாகும் ஆரோன் ஃபிஞ்ச் கடந்த 2011ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரை 145 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஃபிஞ்ச் 5401 ரன்களும், 92 டி20 போட்டிகளில் 2,855 ரன்களும் விளாசியுள்ளார். 5 டெஸ்ட் போட்டிகளில் 278 ரன்களையும் குவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகினாலும், ஐபிஎல் போன்ற உள்நாட்டு தொடர்களில் அவர் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, September 10, 2022, 19:08 [IST]
Other articles published on Sep 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+