பயிற்சியே இல்லையா..?? விராட் கோலி ஓய்வு நேரத்தில் இதைதான் செய்ய போறாராம்.. ரசிகர்கள் வியப்பு!
லண்டன்: இந்திய அணி வீரர் விராட் கோலியின் ஓய்வு பரபரப்பை கிளப்பிய சூழலில் மற்றொரு புதிய தகவல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணி தற்போது இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
இந்த தொடரை முடித்துக்கொண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு செல்லும் இந்திய அணி, 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

விராட் கோலிக்கு ஓய்வு
இந்த தொடருக்கான இந்திய அணியில் இருந்து விராட் கோலி ஒதுக்கப்பட்டுள்ளார். மோசமான ஃபார்மில் தவித்து வருவதால், விராட் கோலியே தனக்கு ஓய்வு தேவை எனக் கோரியதால், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வு தரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆசியக்கோப்பைக்கு அவர் திரும்புவார் எனக் கூறப்பட்டுள்ளது.

ஓய்வு நாட்கள் எத்தனை
ஜூலை 16ம் தேதி 3வது ஒருநாள் போட்டியை முடித்துக்கொண்டு கிளம்பும் விராட் கோலி, அடுத்ததாக ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆசியக்கோப்பைக்கு தான் வருவார். எனவே இடையில் ஒருமாத காலம் ஓய்வில் இருக்கப் போகிறார். இந்த ஓய்வு நேரத்தில் ஹர்திக் பாண்ட்யாவை போன்று தீவிர பயிற்சியை மேற்கொண்டு கம்பேக் தரப்போகிறார் என கூறப்பட்டது.

மாறுபட்ட ப்ளான்
இந்நிலையில் கோலியின் ப்ளான் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது தனது ஓய்வு நேரம் முழுவதையும் தனது குடும்பத்தினருடன் இங்கிலாந்தில் சுற்றுலாவில் கழிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அனுஷ்கா சர்மா மற்றும் வாமிகா இருவரும் தற்போது லண்டனில் தான் இருக்கின்றனர். கோலியின் தாயாரும் லண்டனுக்கு செல்லவுள்ளார். அவர்கள் இங்கிலாந்தில் அமைதியாக விடுமுறையை கழிக்கவுள்ளனராம்.

என்ன காரணம்
கோலி தனது பேட்டிங்கை விட மனநிலையில் தான் பிரச்சினை இருப்பதாக கருதுகிறார். எனவே குடும்பத்தினருடன் சிறு காலத்தை கழித்தால், மன நிம்மதியுடன் புத்துணர்ச்சியாக விளையாடலாம் என யோசிக்கிறார். வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் இருந்து ஆசியக்கோப்பைக்கு தயாராகும் பணிகளில் ஈடுபடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications