Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏய் எப்புட்றா? சட்டென உள்ளே வந்த பந்து.. கண்மூடி திறப்பதற்குள் சிக்ஸர்.. வாயடைத்துப்போன விராட் கோலி

கொல்கத்தா: இலங்கை அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில் உம்ரானின் பந்தை இலங்கை வீரர் எப்படி சிக்ஸர் அடித்தது புரியாமல் விராட் கோலி அதிர்ச்சியில் உறைந்து நின்ற வீடியோ தீயாய் பரவி வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையேயான இந்த 2வது ஒருநாள் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச்-ல் இலங்கை அணி எப்படியும் 300 ரன்களுக்கு மேல் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 215 ரன்களுக்கெல்லாம் ஆல் அவுட்டானது.

சுவாரஸ்ய சம்பவம்

சுவாரஸ்ய சம்பவம்

இந்நிலையில் இப்போட்டியில் இலங்கை வீரர் அடித்த ஒரு ஷாட்டை பார்த்து விராட் கோலி அதிர்ச்சியில் உறைந்துள்ளார். முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய குசல் மெண்டிஸ் அதிரடியாக ரன் குவித்து வந்தார். ஆட்டத்தின் 16வது ஓவரில் உம்ரான் மாலிக் ஷார்ட் பாலாக வீசிய பந்து மெண்டீஸின் இடுப்பு பகுதிக்கு சென்றது. அதுவும் நல்ல வேகத்தில் சென்றது.

கோலி ஆச்சரியம்

கோலி ஆச்சரியம்

இது போன்று உடலுக்கு வரும் பந்தை தடுப்பாட்டம் ஆடுவதே ரிஸ்க்காக இருக்கும். ஆனால் மெண்டீஸ் அப்பந்தை நன்கு வலைத்து டீப் ஃபைன் லெக் திசையில் சிக்ஸருக்கு விளாசினார். சட்டென உள்ளே போன பந்து, எப்படி சிக்ஸருக்கு சென்றது என விராட் கோலி ஆச்சரியத்தில் ஆழ்ந்தார். தனது கைகளை வாயில் வைத்துக்கொண்டு ஏய் எப்புட்றா என்பது போல ரியாக்‌ஷன் கொடுத்தார்.

அடுத்த ஓவரில் ட்விஸ்ட்

அடுத்த ஓவரில் ட்விஸ்ட்

ஆனால் இதே போன்ற அதிரடி ஆட்டத்தை மெண்டீசால் தொடர முடியவில்லை. அந்த சிக்ஸருக்கு அடுத்த ஓவரிலேயே குல்தீப் யாதவ் வீசிய பந்தில் எல்.பி.டபள்யூ முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார். 34 பந்துகளை சந்தித்த அவர் 34 ரன்களை மட்டுமே அடித்து வெளியேறினார். இதன் பின்னர் தான் இலங்கையின் விக்கெட்டே சரிந்தது.

பேட்டிங்கில் அதிர்ச்சி

பேட்டிங்கில் அதிர்ச்சி

பவுலிங்கில் அதிர்ச்சியடைந்த கோலி, பேட்டிங்கில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். ஓப்பனிங் வீரர்கள் ரோகித் சர்மா (17), சுப்மன் கில் (21) என அடுத்தடுத்து வெளியேற, கோலி தான் அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்த்தனர். ஆனால் கோலி வெறும் 4 ரன்களுக்கு போல்ட்டாகி ஏமாற்றினார்.

Story first published: Thursday, January 12, 2023, 19:24 [IST]
Other articles published on Jan 12, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+