
தடுமாறிய இந்திய அணி
247 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ஓப்பனிங் வீரர்கள் ரோகித் சர்மா டக் அவுட்டும், ஷிகர் தவான் 9 ரன்னுக்கும் வெளியேறினர். இதன் பின்னர் வந்த ரிஷப் பண்ட்-ம் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். இதனால் ஒட்டுமொத்த பார்வையும் விராட் கோலி மீது திரும்பியது.

எதிர்பார்ப்பு
சேஸ் செய்வதில் கிங் எனப் பாராட்டப்படும் விராட் கோலி, இன்றைய போட்டியின் மூலம் தனது கம்பேக் தருவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதுவும் லார்ட்ஸ் மைதானத்தில் அவருக்கு நல்ல ரெக்கார்ட் உள்ளது. ஆனால் 25 பந்துகளில் 16 ரன்களை மட்டுமே எடுத்து மீண்டும் சொதப்பினார். இந்நிலையில் இதற்கான காரணம் அவர் செய்த ஒரு சிறு தவறு தான்.

விராட் கோலி தவறு
இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி வந்தவுடன் தைரியமாக ஷாட்களை ஆடி வந்தார். வந்த வேகத்தில் ஆஃப் ட்ரைவ், கவர் ட்ரைவ், ஆன் ட்ரைவ் என அடுத்தடுத்து 3 பவுண்டரிகளை விளாசினார். ஆனால் அந்த துணிச்சல் தவான் மற்றும் ரிஷப் பண்ட் அவுட்டானவுடன் குறைந்தது. பந்தை சந்திப்பதற்கே தடுமாறினர்.

என்ன காரணம்
பவுண்டரிகளை அடித்து வந்த கோலி, தடுப்பாட்டம் ஆட தொடங்கினார். டேவிட் வில்லி வீசிய ஆஃப் சைட் பந்தை தடுப்பாட்டம் ஆட முயன்ற போது, அது பேட்டில் எட்ஜாகி கேட்ச் சென்றது. பந்து சற்று பவுன்சராக வந்ததால் கோலியின் பேட்டில் சுலபமாக உரசி சென்றது. இதுவே அவர் துணிச்சலுடன் இருந்திருந்தால், அந்த பந்தை ஆன் ட்ரைவ் ஷாட் ஆடியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக 25 பந்துளை சந்தித்த அவர் 16 ரன்களை மட்டுமே அடித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











