Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி மாத்தி ஆடறதுதான் விராட் கோலியோட பலம்... விக்ரம் ரத்தோர்

டெல்லி : சூழ்நிலைக்கு ஏற்றாற் போல கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் தன்னுடைய ஆட்டத்தை மாற்றி அமைத்து விளையாடும் திறமை கேப்டன் விராட் கோலிக்கு உள்ளதாக இந்திய அணியின் பேட்டிங் கோச் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

How Dhoni changed between 2007 and 2013, says Irfan Pathan

இதேபோல தன்னுடைய ஆட்டத்தில் மிகவும் கவனமாகமும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் செயல்படுபவர் விராட் கோலி என்றும் ரத்தோர் கூறியுள்ளார்.

உலக அளவில் சிறந்த வீரராக இருக்க வேண்டும் என்பது விராட் கோலியின் கனவு என்றும் அதற்காக அவர் கடுமையாக உழைத்து வருவதாகவும் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

ஆட்டத்தை மாற்றும் திறன்

ஆட்டத்தை மாற்றும் திறன்

கேப்டன் விராட் கோலி தன்னுடைய தனிப்பட்ட ஆட்டத்தில் மட்டுமின்றி கேப்டனாகவும் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி வருபவர். தனிப்பட்ட முறையில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருவதோடு, இந்திய அணியும் பல்வேறு போட்டித் தொடர்களில் சிறந்த வெற்றியை பெறவும் அவர் தனிப்பட்ட முறையில் பணியாற்றி வருகிறார்.

ஆட்டத்தில் அர்ப்பணிப்பு உணர்வு

ஆட்டத்தில் அர்ப்பணிப்பு உணர்வு

இந்நிலையில் ஆட்டத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னுடைய ஆட்டத்தை மூன்று வடிவங்களிலும் சிறப்பாக மாற்றி அமைத்து விளையாடும் திறன் கேப்டன் விராட் கோலிக்கு உள்ளதாக இந்திய அணியின் பேட்டிங் கோச் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய ஆட்டத்தை அர்ப்பணிப்பு உணர்வுடன் கோலி விளையாடுவதாகவும் ரத்தோர் கூறியுள்ளார்.

கடுமையான உழைப்பு

கடுமையான உழைப்பு

விராட் கோலியின் அர்ப்பணிப்புடன் கூடிய ஆட்டத்தை அவரது சிறப்பான திறமையாக தான் பார்ப்பதாகவும் ரத்தோர் தெரிவித்துள்ளார். ஸ்போர்ட்ஸ்கீடா நிகழ்ச்சிக்காக பேசிய ரத்தோர் விராட் கோலியின் பல்வேறு திறன்கள் குறித்து தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். உலக அளவில் சிறந்த கிரிக்கெட் வீரராக தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக கடுமையாக உழைத்து வருபவர் விராட் கோலி என்றும் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் தொடர்

மேற்கிந்திய தீவுகள் தொடர்

தொடர்ந்து பேசிய ரத்தோர், கடந்த 2016ல் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து இரண்டு மாதங்கள் விளையாடி, 973 ரன்களை குவித்த விராட் கோலி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்றதை நினைவு கூர்ந்துள்ளார். மேலும் உடனடியாக மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட விராட் கோலி, முதல் போட்டியிலேயே இரட்டை சதத்தை அடித்ததையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Sunday, June 28, 2020, 16:53 [IST]
Other articles published on Jun 28, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+