Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓடி வந்து, தாவி பிடித்து பந்தை வீசி தெறிக்கவிட்ட இந்திய வீரர்… வைரலாகும் ரன் அவுட் வீடியோ..!!

Recommended Video

Watch video : virat kohli stunning run out goes viral

கிங்ஸ்டன்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்டில் கோலியின் ரன் அவுட் வீடியோ, இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் இந்திய அணி, விஹாரியுன் அசத்தல் சதத்துடன் 416 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Virat Kohli’s stunning run out goes viral against west indies

299 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 168 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் இந்திய பந்து வீச்சாளர்களின் ஆதிக்கத்தால் 210 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 257 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 2க்கு 0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

அபாரமான ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டி 20, ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் என 3 தொடர்களையும் கைப்பற்றி யுள்ளது இந்திய அணி. டெஸ்ட் ரேங்க் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடித்து சாதனை படைத்திருக்கிறது.

தொடரில் கேப்டன் கோலி செய்த ஒரு அசத்தல் ரன் அவுட் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. 4வது நாள் ஆட்டத்தில் கோலி, ஷமர் ப்ரூக்ஸை ரன் அவுட் செய்தார். எதிர்பாராத இந்த ரன் அவுட்டால் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் திணறித்தான் போயினர்.

Story first published: Tuesday, September 3, 2019, 13:29 [IST]
Other articles published on Sep 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+