வரலாற்று சிறப்புமிக்க போட்டி... போட்டியை காண இளவரசியுடன் வந்த அனுஷ்கா!
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற்று வருகிறது.
புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் இரு அணிகளும் முதல் இன்னிங்சை முடித்துள்ளன. இந்நிலையில் இந்த போட்டியை காண கேப்டன் கோலியின் மனைவி புதிதாக பிறந்த தனது மகளுடன் மைதானத்திற்கு வந்திருந்தார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளும் தலா 112 மற்றும் 145 ரன்களில் தங்களது முதல் இன்னிங்சை முடித்துள்ளன. சென்னையில் இரு அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி பெற்று சமநலையில் உள்ளன.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா, புதிதாக பிறந்துள்ள தனது மகளுடன் பார்வையாளராக கலந்து கொண்டார். இதுகுறித்து புகைப்படங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டியில் அவர் தன்னுடைய இளவரசியுடன் கலந்து கொண்டார்.


Click it and Unblock the Notifications