Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாஷிங்டன் சுந்தர், ஷார்துல் தாக்கூர் பேட்டிங்கை செல்போனில் பார்த்து வியந்தேன் புகழ்ந்து தள்ளிய கோலி!

சென்னை: இங்கிலாந்து தொடர் முழுவதும் நன்றாக செயல்படுவது மிகவும் முக்கியம் என்று இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் குறித்து இப்போது சிந்திக்கவில்லை. இந்த தொடரில் கவனம் செலுத்துவதுதான் இப்போது முக்கியம் என்றும் விராட் கோலி கூறினார்.

பிரிஸ்பேனில் வாஷிங்டன் சுந்தர், ஷார்துல் தாக்கூர் ஆட்டத்தை தன்னுடைய செல்போனில் பார்த்ததாகவும் விராட் கோலி தெரிவித்தார்.

பெரும் எதிர்பார்ப்பு

பெரும் எதிர்பார்ப்பு

இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி நாளை காலை தொடங்க உள்ளது. இங்கிலாந்து அணி இலங்கையை 2-0 என்ற கணக்கில் சொந்த மண்ணில் வீழ்த்திய கையோடு இந்தியா வந்துள்ளது. இந்தியாவுக்கு உள்ளூர் சூழ்நிலை சாதகமாக உள்ளது. தரமான ஸ்பின்னர்கள் இருப்பது இந்தியாவுக்கு கூடுதல் பலமாக உள்ளது.

மாஸ் காட்டப் போவது யார்?

மாஸ் காட்டப் போவது யார்?

இங்கிலாந்து அணியும் சளைத்தவை அல்ல. அங்கும் திறமையான வீரர்கள் இருக்கின்றனர். இங்கிலாந்தும் 2 ஸ்பின்னர்கள் மூலம் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க தயாராக உள்ளது. பாஸ்ட் பவுலிங்கும் அங்கும் தரமாக உள்ளது. ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், கேப்டன் ஜோ ரூட் ஆகியோரை அந்த அணி அதிகம் நம்பியுள்ளது. இதில் யார் மாஸ் காட்டுவார்கள் என்பது நாளை முதல் தெரியும்.

தொடரை நன்றாக தொடங்குவோம்

தொடரை நன்றாக தொடங்குவோம்

இந்த நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி நிருபர்களிடம் பேட்டியளித்தபோது கூறியதாவது:-

இந்த தொடரை நன்றாகத் தொடங்குவது மிகவும் முக்கியம், அதனை இந்த தொடர் முழுவதும் கொண்டு செல்லவும் நாங்கள் விரும்புகிறோம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் குறித்து நாங்கள் இப்போது சிந்திக்கவில்லை. இதனை சிந்திப்பதன் மூலம் எங்களுக்கு கூடுதல் அழுத்தத்தை சேர்க்க விரும்பவில்லை.

வாஷிங்டன் சுந்தரின் பிரமாதமான ஆட்டம்

வாஷிங்டன் சுந்தரின் பிரமாதமான ஆட்டம்

பல மாதங்கள் தொலைவில் உள்ள ஒன்றைப் பற்றி யோசிப்பதில் அர்த்தமில்லை. இந்த தொடரில் கவனம் செலுத்துவதுதான் இப்போது முக்கியம். ஒரு தந்தையாக மாறுவது எனது வாழ்க்கையின் மிகப் பெரிய தருணம். இதை ஒரு தொடர் வெற்றியுடன் ஒப்பிட முடியாது. ஆனாலும் ஆஸ்திரேலியா தொடரில் நான் இல்லாவிட்டாலும் அணியுடனான எனது தொடர்பு நீங்காது. நாங்கள் தொடர்ந்து இணைக்கப்பட்டுள்ளோம். பிரிஸ்பேனில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷார்துல் தாக்கூர் ஆகியோரின் பிரமாதமான ஆட்டத்தை என்னுடைய செல்போனில் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன் என்று விராட் கோலி கூறினார்.

Story first published: Friday, February 5, 2021, 8:28 [IST]
Other articles published on Feb 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+