மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணி விராட் கோலி 19 வயதான ஆஸ்திரேலிய வீரர் மோதிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தில் விராட் கோலிக்கு தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஐசிசி அவருக்கு போட்டி ஊதியத்திலிருந்து 20 சதவீதம் அபராதம் விதித்து இருக்கிறது.
இதனால் விராட் கோலி தப்பித்து இருக்கிறார். இந்த நிலையில் விராட் கோலி செய்தது தேவையில்லாத ஒரு விஷயம் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் பவி சாஸ்திரி தெரிவித்திருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், தேவையில்லாத ஒரு விஷயத்தை விராட் கோலி செய்துவிட்டார்.

இப்படி நடந்திருக்க வேண்டியது இல்லை. இது போன்ற சம்பவங்களை பார்க்க யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் விராட் கோலி ஏன் இவ்வாறு செய்தேன் என்று ஒரு விளக்கத்தை அவர் வைத்திருப்பார். ஆனால் இது போன்ற விஷயங்களை யாருமே எதிர்பார்க்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் விராட் கோலிக்கு வெறும் அபாரதம் மட்டும் போதாது என ஆஸ்திரேலிய ஊடகம் கடும் எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறது. இது குறித்து ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர் பீட்டர் லாலர் பேசுகையில், விராட் கோலி செய்தது மிகவும் மோசமான ஒரு செயல். அவர் செய்த விஷயத்திற்கு மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கியிருக்க வேண்டும். ஆனால் தற்போது அவர் எஸ்கேப்பாகி இருக்கிறார். இந்த சம்பவத்தை வைத்து நாம் பல கேள்விகளை போட்டி நடுவரிடம் கேட்க வேண்டி இருக்கிறது.

வேண்டுமென்றே ஒரு வீரரை விராட் கோலி மோதி பிரச்சனை செய்திருக்கிறார். ஆனால் இதற்கு விராட் கோலி மீது கடும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மீண்டும் ஏதோ சில காரணங்களால் விராட் கோலிக்கு தடை விதிக்க கூடாது என்பது போல் போட்டி நடுவர் செயல்பட்டு இருக்கிறார்.
விராட் கோலியை கண்டிப்பாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும். அவர் செய்தது மன்னிக்க முடியாத ஒரு செயல். 2018 ஆம் ஆண்டு இதேபோல் ரபாடா ஸ்மித் மீது மோதினார். அப்போது ஸ்மித்துக்கு மூன்று புள்ளிகள் வழங்கப்பட்டது. கோலி செய்தது அதைவிட மோசமானது. ஆனால் அவருக்கு ஒரு புள்ளிதான் வழங்கப்பட்டு இருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.